கவலை மற்றும் மன அழுத்தம் போக்கும் வழிகள்
மனம் என்றால்?
மனம் என்பது ஐம்புலன்கள் (ஐந்தறிவு கண் காது மூக்கு தொடு உணர்வு, நாக்கு) வழியாக பதிவான பதிவுகளின் தொகுப்பு ஆகும். மனிதனின் வளர்ச்சி அவனின் ஆறாவது அறிவான மனம் எவ்வாறு சிந்திக்கிறது என்பதைப் பொறுத்துதான் அமைகிறது. மனதை சரியான பாதையில் சிந்திக்க கற்றுக்கொடுப்பதே கல்வி ஆகும். மனம் என்பது கண்ணுக்கு தெரியாத மிகவும் சக்தி வாய்ந்த கருவியாகும்
மனதின் செயல்பாடுகள் நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது. 1.கவனித்தல், 2. சிந்தித்தல் 3. உணர்தல் 4. செயல்படுதல் ஆகும். மனிதனின் மூளை வழியாகத்தான் மனம் இயங்குகிறது. கவனித்தல் என்பது இடது மூளை சார்ந்தது, சிந்தித்தல் என்பது முன் மூளை சார்ந்தது, உணர்தல் என்பது வலது மூளை சார்ந்தது, செயல்படுதல் என்பது பின் மூளை சார்ந்தது.
சிந்தனையே பலம்:
நாம் ஆரோக்கியமாக வாழ மனதின் இரண்டு பகுதிகளை சரிசெய்யவேண்டும். கவனித்தலை சரி செய்ய நிகழ்காலத்தில் வாழ பயிற்சி செய்ய வேண்டும். சிந்தித்தலை சரி செய்ய எண்ணங்களை ஆராய வேண்டும் நமது மனப்பதிவில் உள்ள பொருட்களையோ மனிதர்களையோ நிகழ்வுகளையோ ஐம்புலங்கள் வழியாக மனம் உள்வாங்கும் போது அதற்குறிய எண்ணங்களை தானாக உருவாக்கும் நிச்சயமாக எண்ணங்களை கட்டுப்படுத்த முடியாது. வரும் எண்ணங்களில் இருந்து செயல்பட முடிந்த எண்ணங்களை மட்டுமே சிந்திக்க வேண்டும். செயல்படாத எண்ணங்களை சிந்திக்கக் கூடாது அனைவரும் செய்யும் தவறு அனைத்து எண்ணங்களையும் சிந்தித்துவிட்டு கவலையிலும் மன அழுத்தத்திலும் சிக்கிக்கொள்கிறோம்
எண்ணங்களுக்கு சக்தி இல்லை!
இயற்கை நியதிப்படி சிந்தித்த எண்ணம் நிச்சயமாக செயலாக வேண்டும் ஆனால் நாம் செயல்படுத்த முடியாத எண்ணங்களை சிந்திக்கிறோம். செயல்பட முடியாததால் அது அனைத்தும் குப்பைகளாக மனதில் தேங்குகிறது. மனதில் தேவையில்லாமல் தேங்கும் குப்பைகளால்தான் கவலை மற்றும் மன அழுத்தம் உருவாகிறது
சிந்தனைதான் சக்தி வாய்ந்தது!!
முதலில் எண்ணம் எது சிந்தனை எது என்பதை பிரிக்க வேண்டும். எண்ணம் சிந்தனை இருவரும் இரட்டையர்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பார்கள் ஆனால் இருவரும் வேறு வேறு. எண்ணங்களில் நல்ல எண்ணம் கெட்ட எண்ணம் என்று எதுவும் கிடையாது நம் மனப்பதிவுகளில் உள்ளதை ஐம்புலன்களில் ஏதேனும் ஒன்றின் வழியாக மனதிற்கு தகவல் கிடைத்தவுடன் மனம் ஆயிரக்கணக்கில் எண்ணங்களை உருவாக்கிவிடும் அதில் எந்த எண்ணத்தை சிந்திக்வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்
பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறோம் அங்கு நிறைய பேருந்துகள் வரும் எந்த பேருந்தில் ஏற வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்கிறோம் அது போல் நிறைய எண்ணங்கள் வரும் அதில் செயல் பட முடிந்ததை மட்டுமே வேண்டும். எண்ணங்களின் காலம் அதிக பட்சம் அரை வினாடிதான் சிந்தனைக்குதான் காலம் அதிகம். அனைவரும் அனைத்து எண்ணங்களையும் ஒரே நேரத்தில் சிந்தித்து கவலை மற்றும் மன அழுத்தத்தில் சிக்கிக்கொள்கிறோம்.
கவனித்தைலையும் சிந்தனையையும் சரி செய்தால் உணர்வும் செயலும் தானாக சரியாகிவிடும். முதலில் கனத்தை கூட்டினால் எண்ணங்கள் சீரான வரிசையில் உருவாகும் கிடைக்கும் எண்ணங்களிலிருந்து செயலுக்கு தேவையான எண்ணங்களை எடுத்து சிந்தித்தால் அதற்கான செயல் எவ்வாறு செய்யவேண்டும் என்பதை உணர்வோம் பின்னர் செயல் நேர்த்தியாக முழுமையாகவும் நடைபெறும்
சிந்தனையை சரிசெய்வோமா?
“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.”
குறள் 467
ஒரு செயலை செய்யும் போது முதலில் கவனிக்க வேண்டும் மனம் நிகழ்கணத்தில் இருக்கவேண்டும் அப்போது மனம் அந்த செயலுக்கு தேவையான எண்ணங்களை உருவாக்கும. பின்னர் அதில் செயலுக்கு தேவையான எண்ணத்தை எடுத்து சிந்திக்க வேண்டும் அவ்வாறு சிந்திக்கும் போது மனம் எவ்வாறு அந்த செயலை செய்ய வேண்டும் என்பதை இயற்கையும் தொடர்பு கொண்டு தானாக உணரும். உணர்ந்த பின் செயல் சிறப்பாக இருக்கும். இவ்வாறு செய்யப்படும் செயல்கள் நிச்சயமாக வெற்றியடையும்
சிந்திக்காமல் செயல்படுவதால்தான் தோல்வி அடைகிறோம் தோல்வியால்தான் கவலையும் மனஅழுத்தமும் உருவாகிறது எந்த செயல் செய்யும் முன் கவனித்து சிந்தித்தால் உணர்வும் செயலும் முழுமையடையும்.
கோபம், வெறுப்பு, பயம், பதட்டம் தாழ்வு மனப்பான்மை போன்ற உணர்வுகள் நமது தவறான சிந்தனையினால் உருவாக்கப்பட்ட மோசமான உணர்வகள். மகிழ்ச்சி, நன்றியுணர்வு, அமைதி, நிம்மதி, நிறைவு போன்ற உணர்வுகள் நமது சரியான சிந்தனையினால் உருவாக்கப்பட்ட சிறந்த உணர்வுகள் எனவே நமது பிரச்சனைகள் அனைத்தும் நமது சிந்தனையில் மட்டுமே உள்ளது.
முதலில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் கடவுள் என்பது பெயர்ச்சொல் அல்ல வினைச்சொல். கடவுளை உருவத்தில் தேடுகிறோம் நிச்சயமாக கிடைக்கமாட்டார் அவர் செயலுக்கு உட்பட்டவர் யார் நிகழ்கணத்தில் கவனித்து சரியான கோணத்தில் சிந்தித்து உணர்ந்து செயல்படுகிறாரோ அவர்தான் வெற்றியாளர் சாதனையாளர் ஆன்மீகவாதி!
“உணர்வு என்பது மனம் சார்ந்தது உணர்ச்சி என்பது உடல் சார்ந்தது”
சரியான சிந்தனைகள்:
அன்பு:
அன்பு என்பது எதிர்பார்ப்பு இல்லாமல் வாழுதல் அல்லது செயல்படல், இதை உணர்ந்த நம் முன்னோர்கள் கடமையை செய் பலனை எதிர்பாராதே என்றார்கள் இயற்கையும் நமக்கு தேவையான அனைத்தையும் எந்த எதிர்பார்ப்பில்லாமல் அனைத்து உயிர்களுக்கும் அளிக்கிறது அன்புதான் கடவுள் என்பது இயற்கையில் இயக்கம் மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம்.
எதிர்பார்ப்பு இல்லாமல் வாழும் மனிதக்கூட்டம் ஒன்று உள்ளது அவர்கள் குழுந்தைகள். நாம் குழந்தைகளை பார்க்கும் போது நமக்குள் இனம் புரியாத மகிழ்ச்சி உருவாகும் இந்த உணர்வுக்கு பெயர்தான் அன்பு, அதனால்தான் குழுந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்றார்கள். எதிர்பார்ப்பு இல்லாமல் சக மனிதர்களிடம் பழகும் போதும், செயல்களை செய்யும்போதும் அது கடவுள் செயலாகவே மாறிப்போகிறது
செய்பவன் காணமல் போய் செயல் மட்டுமே மிஞ்சுகிறது. நடனமாடுபவன் காணமல் போய் நடனம் மட்டுமே மிஞ்சும், இசையமைப்பாளன் காணமல் போய் இசை மட்டுமே மிஞ்சும், பாடல் பாடுபவன் காணமல் போய் பாடல் மட்டுமே மிஞ்சும் இவ்வாறு கூறிக்கொண்டே போகலாம்
எதிர்பார்ப்பு இல்லாமல் செயல்படும் போது கவனிக்கும் திறன் அதிகமாக இருக்கும் மனம் நிகழ்கணத்தில் அப்போதைய செயலை கவனமாக செய்யும் நிச்சமாக அந்த செயலின் முடிவு பேரானந்தத்தை தரும். எனவே அனைத்து மனிதர்களிடத்தும் செயல்களிலும் அன்பிருந்தால்(அன்பு என்பது உணர்வு சார்ந்தது அதாவது மனம் சார்ந்தது)கவலையோ மன அழுத்தமோ நம்மை ஆட்கொள்ளாது எனவே சிந்தனையில் அன்பை பெருக்கிகொள்வோம்.
நன்றியுணர்வு:
நன்றியுணர்வு என்பது கிடைத்ததை எல்லாம் கொண்டாடுவது. அனைவரும் கவலை மற்றும் மன அழுத்தத்தில் சிக்கும் இடம் நன்றியுண்ர்வு இல்லாமை. அனைத்து மனிதர்களுக்கும் நிச்சயமாக மனதளவில் ஏதோ ஒரு குறை இருக்கும். குறை எவ்வாறு உருவாகிறது என்றால் நம்மை இன்னொருவரிடம் ஒப்பிடும் போது அவரிடம் உள்ளது நம்மிடம் இல்லை என சிந்திக்கும்போதுதான் மனதில் குறை உருவாகிறது.
சிந்தனையில் நம்மிடம் உள்ளதை மட்டும் நினைத்து அதைக் கொண்டாட வேண்டும். அவ்வாறு கொண்டாடும் போது உருவாகும் ஆனந்ததத்திற்கு எல்லையில்லை. ஆனால் நாம் இல்லாத சில விஷயங்களை மட்டுமே நினைத்து இருக்கும் பல விஷயங்களை நினைக்காமலும் கவலையிலும் துன்பத்திலும் சிக்கிக்கொள்கிறோம்.
நன்றி சொல்லும் நெஞ்சம் நமக்கு இருந்தால் நான்கு திசையிலும் உறவுகள் விரியும் முயற்சி என்னும் அற்புதச் சிறகுகளிருந்தால் ஆகாயத்திற்கு அப்பாலும் அதிசயம் நிகழ்த்தலாம்!
நாம் வாழும் வாழ்விற்கு ஆதாரமாக, பக்கபலமாக, உதவிக்கரமாக பலர் இருக்கின்றார்கள். மற்றவர்களின் உதவியும், ஒத்துழைப்பும் இன்றி நம்மால் வாழவே முடியாது. அவ்வாறு நமக்கு உதவிக்கரமாக இருக்கும் அனைவருக்கும் நமது நன்றி உணர்வை வாழ்நாள் முழுவதும் தெரிவித்துக்கொண்டே இருக்க வேண்டும். இதைத்தான் Attitude Of Gratitude என்பார்கள்.
வள்ளுவப் பெருந்தகையும் நன்றி மறப்பது நன்றன்று என்றார். நன்றியுணர்வோடு செயல்படும் போது நமது மனம் பக்குவப்பட்ட நிலையில் பணிவோடும் தெளிவோடும் இருக்கின்றது.
தான் என்ற அகந்தை நீங்கிய நிலையில் எண்ணங்கள் தெளிந்த நீருற்றாகவே ஊற்றெடுக்கத் தொடங்குகிறது. இதுநாள் வரை உங்களுக்கு உதவியவர்களை நெஞ்சில் நினைத்து நன்றி செலுத்திப் பாருங்கள் உங்களுக்குள் ஒரு பணிவுணர்வும் மென்மையும் தோன்றும். பணிவுடன் துணிவும் வேண்டும்.
மற்றவர்களின் மீது அன்பு செலுத்துகின்ற பண்பும், மற்றவர்களை மதித்து நடக்கின்ற தன்மையும் ஒருவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பது உறுதி. இதைத்தான் ஒரு கவிஞர் பதவி வருகின்றபோது பணிவு வரவேண்டும் என்றார். வெற்றி பெறுவதற்கு பணிவும் துணிவும் வேண்டும். தோல்வி வருகின்ற போதும் தொடர்ந்து முயற்சிக்கும் துணிவுதான் ஒருவரை வெற்றியின் சிகரத்திற்கு அழைத்துச் செல்கிறது
ஒரு சூஃபி ஞானி தினமும் ஒவ்வொரு தடவையும் இறைவனுக்கு நன்றி சொல்வதை வழக்கமாக வைத்திருந்தார். பிரார்த்தணை செய்யமாட்டார், இறைவனுக்கு நன்றி மட்டும் தான் சொல்வார். அவ்வளவுதான்.
இறைவா ஒரு நாள் முழுவதும் என்னை கவனத்தில் எடுத்துக் காத்துக் கொண்டாயே! நன்றி
இன்று கண் திறந்தேன்! அற்புதமான நாள்! நன்றி"
"இன்னும் சுவாசிக்கிறேன்! நன்றி"
இப்படி ஒவ்வொரு விசயத்திற்கும் சூஃபி ஞானி நன்றி சொல்ல சொல்ல, சீடர்களும் நன்றி சொன்னார்கள். வழக்கம் போல சீடர்கள் அவர்களின் குருவோடு சேர்ந்து யாத்திரையை தொடர்ந்தார்கள்.
ஒரு நாள் ஒரு ஊரில் சாப்பாடு கிடைக்கவே இல்லை. மறுநாள் அடுத்த ஊருக்கு சென்றார்கள். அந்த ஊரிலும் உணவு கிடைக்கவே இல்லை. மூன்றாவது நாளும் அதே நிலை நீடித்தது, உணவு கிடைக்கவேஇல்லை.
ஆனால் அந்த ஞானி தங்களை பகல் முழுவதும் வழிநடத்தியதற்கும், நன்றாக பொழுது விடிந்ததற்கும் நன்றி சொல்லாமல் விடவில்லை.
நான்காவது நாளும் அவர்களை ஒரு ஊரில் கூட தங்க விடாமல் விரட்டி அடித்துக் கொண்டிருக்கின்றனர். அன்று வேறு வழியில்லாமல் ஒரு சுடுகாட்டில் படுத்துக்கொண்டனர்.நான்கு நாள் பட்ட அவஸ்தைகளால் சீடர்கள் நொந்து போயினர். பசியின் கோரம் அவர்களைத் தூங்க விடவில்லை.
ஐந்தாம் நாள் காலையும் சூஃபி ஞானி கடவுளுக்கு நன்றி சொல்ல ஆரம்பிதார். ஆனால் சீடர்களோ... நன்றி சொல்ல மறுத்தனர். மறுத்ததோடு நில்லாமல், தங்களுடைய வெறுப்பை உமிழ ஆரம்பித்தனர்.
மூன்று நாட்களாக உணவு இல்லை, நான்காம் நாள் தங்க இடமில்லை. இன்று என்ன ஆகுமோ தெரியவில்லை. ஏன் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்?" என்று கேட்டனர்.
ஞானி சிரித்துக் கொண்டே சொன்னார்: மூன்று நாள் இறைவன் உணவு வழங்காததற்காக இவ்வளவு கவலைப் படுகிறீர்களே, நமக்கு முப்பது வருடங்களாக இறைவன் உணவு வழங்கி வருகிறாரே!
ஒரே ஒரு நாள் தங்க இடம் தரவில்லை ஆனால், முப்பது வருடமாக இந்த உலகத்தில் தங்கியிருக்கிறோம். முப்பது வருடம் நம்மைக்காத்தவருக்கு இந்த மூன்று நாட்கள் பற்றித் தெரியாதா என்ன?
முப்பது வருடம் நம்மைக் காத்ததற்க்கு இன்றிலிருந்து நன்றி சொல்ல ஆரம்பித்தாலே. நம் நன்றிக்கடன் தீர முப்பது வருடமாகும். நடுவில் எங்கிருந்து வந்தது இவ்வளவு வெறுப்பும், கோபமும்?" எனக் கேட்டார்.
வாழ்க்கையில் இயற்கை நமக்கு எல்லாமும் கொடுத்திருந்தாலும் அதிருப்தியே நம்மில் பலரிடம் காணப்படுகிறது.
அதிருப்தி பிறந்ததற்கான காரணம் நன்றியுணர்வு என்ற பெரிய தியான முறையை மனிதன் மறந்து போனதுதான்.
நம் வாழ்வில் சரியாக யோசித்துப் பார்த்தால் புரியும் இந்த வாழும் வாழ்க்கையே நமக்கு ஒரு பரிசு போலத்தான்.
ரமண மகரிஷி அற்புதமான ஒரு சுலோகம் சொல்வார்....
"கிடைக்கும் முன் கடுகேயானாலும் மலையாக்கி காண்பித்து
கிடைத்த பின் மலையேயானாலும் கடுகாக்கி காண்பிக்கும் -
மடமனம்!"
நம்முடைய மனதின் இயல்பே, எவ்வளவு கிடைத்தாலும், அதை அனுபவிக்காமல் அடுத்து, அடுத்து என்று பெரிய பெரிய விசயங்களை நோக்கியே ஆசையை திசை திருப்பி விடும்.
திருப்தியோடு வாழ அதற்க்கான காரணங்களை கண்டுபிடித்து, அதனோடு ஒன்றி நன்றியுணர்வு கொண்டு வாழ ஆரம்பிதீர்கள் என்றால் ஆனந்தமே உஙள் வாழ்வில் பொங்கும். நன்றியுணர்வே ஆனந்தத்தை கொண்டுவரும் சக்தி,
நன்றியுணர்வும் அன்பும் பெருகினால் அனைத்தம் நம்மை வந்தடையும் மனம் நிம்மதியாகவும் அமைதியாகவும் இருக்கும், வாழ்வில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். உடல் முழு ஆரோக்கியத்துடன் இயங்கும் முழுமையான வாழ்கை அமையும் வாழ்க வாழ்வாங்கு
சந்தேகங்களுக்கு
ஆ. சின்னதுரை
8608205243
மாலை நான்கு மணிக்கு மேல் அழைக்கவும்