தென் மாவட்டங்களில் மழையால் ரத்தான பள்ளி அரையாண்டு தேர்வுகள் 04-01-2024 அன்று துவங்குகிறது
பள்ளி மாணவர்களுக்கு, டிச., 13 முதல் 22 வரை, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. கன மழை பாதிப்பு காரணமாக, திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மட்டும், தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன
அரையாண்டு தேர்வு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. மழையால் தள்ளி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளை, நாளை மறுநாள் (04-01-2024) நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது