12ம் வகுப்பு துணை தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும்
12ம் வகுப்பு துணை தேர்வர்களுக்கான மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன.
அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 12ம் வகுப்பு துணை பொதுத்தேர்வு எழுதி, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கான மதிப்பெண் பட்டியல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பகல் 11:00 மணிக்கு வெளியிடப்படுகிறது.பட்டியலில் இடம் பெறாத மாணவர்கள், விடைத்தாள் மற்றும் மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை எனக் கருத வேண்டும்.
பட்டியலில் உள்ளவர்கள் மட்டும், தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, திருத்தப் பட்ட மதிப்பெண் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை உடனே பதிவிறக்கம் செய்யலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.