முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு மார்ச் 8ல் ஆலோசனை கூட்டம்
பள்ளிக்கல்வி துறையின் வளர்ச்சி பணிகள்குறித்து, வரும் 8ம் தேதி முதன்மை கல்வி அலுவலர்களின் ஆலோசனை கூட்டம், சென்னையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக பள்ளிக்கல்வி துறையின் வளர்ச்சி பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் ஆலோசனை கூட்டம், மாதந்தோறும் சென்னையில் நடத்தப்படுகிறது. இதன்படி, மார்ச் மாத கூட்டம், வரும் 1ம் தேதி நடத்தப்படும் என, அறிவிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த கூட்டம், 8ம் தேதி சென்னை அண்ணா நுாற்றாண்டு கூட்டரங்கில்நடக்கும் என, பள்ளிக் கல்வி கமிஷனரகம் அறிவித்துள்ளது. இந்த கூட்டத்துக்கு வரும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தின் பள்ளிக் கல்வி திட்டங்களின் நிலை குறித்த விரிவான விபரங்களுடன் வர உத்தரவிடப்பட்டுள்ளது.