+2 தேர்வு மாற்றுத் திறனாளி சலுகை கோருபவர்கள் விண்ணப்பம் தர உத்தரவு
பிளஸ் 2 பொது தேர்வுக்கு, மாற்றுத் திறனாளி சலுகைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வு துறை உத்தரவிட்டு உள்ளது. முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில், மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை கேட்கும் மாணவர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றிதழ்களை, வரும் 13ம் தேதிக்குள் மாணவர்களிடம் இருந்து பள்ளிகள் பெற வேண்டும்.அவற்றை முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து, 20ம் தேதிக்குள் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
கண் பார்வையற்றோர், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதோர், விபத்துகளால் உடல் ஊனமுற்றவர்கள், பாரிச வாயு நோயால் பாதிக்கப்பட்டோர், மனநலம் குன்றியோர், டிஸ்லெக்சியா குறைபாடு உள்ளவர்கள் மற்றும் நரம்பியல் குறைபாடு உள்ளவர்கள், சலுகை கோரி விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.