பள்ளி திறப்பு பணி கள ஆய்வுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
நவம்பர் 1 முதல் பள்ளிகளை திறப்பது தொடர்பான ஆயத்த பணிகள் குறித்து, அரசு பள்ளிகளில் நேரடி ஆய்வு நடத்த வேண்டும் என, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.கொரோனா காரணமாக, 19 மாதங்களாக, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளில் வகுப்புகள் நடக்கவில்லை. வீட்டில் இருந்தவாறு, ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடந்தன.தற்போது, கொரோனா குறைந்து விட்ட நிலையில், வரும் நவம்பர் 1ம் தேதி முதல், ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறந்து, நேரடி வகுப்புகள் நடத்த, அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, மாவட்ட மற்றும் வட்டார பள்ளி கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி கமிஷனரகம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், பள்ளிகளை திறப்பு குறித்து, முதன்மை, மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள், அக்டோபர் 27க்குள் நேரடி ஆய்வு நடத்த வேண்டும் என, பள்ளி கல்வி கமிஷனரகம் அறிவுறுத்தியுள்ளது.