வேளாண்மை படிப்பு நவம்பர் 2ல் தரவரிசை வெளியீடு
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் இளநிலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நவம்பர் 2ல் வெளியாகிறது.
கோவை வேளாண் பல்கலையின் கீழ் 14 உறுப்பு கல்லுாரிகள், 28 இணைப்பு கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 11 இளங்கலை பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. முதலாமாண்டு சேர்க்கை விண்ணப்பங்கள், செப்டம்பர் 8 முதல் பெறப்படுகின்றன. இதுவரை 40 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டில் புதிதாக துவங்க உள்ள நான்கு கல்லுாரிகள்,தமிழ்வழி படிப்புகளையும் சேர்த்து 300க்கும் மேற்பட்ட இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட உள்ளன.விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, அக்டோபர் 7 இறுதி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை இணையவழியில், அக்டோபர் 18 வரை சமர்ப்பிக்கலாம். தரவரிசை பட்டியல், நவம்பர் 2ல் வெளியிடப்படும்