நீங்கள் சாப்பிடும் இட்லியின் எண்ணிக்கையை அதற்கு வைக்கும் சட்னி முடிவெடுக்கும் போது! வாழ்கையை முடிவு செய்வது?
இந்த வாழ்க்கையை மட்டும் உங்களால் மட்டும் எப்படி முடிவு செய்ய முடியும்.
முடியும் எப்படினா
வாழ்க்கை பற்றிய புரிதல் எந்த அளவிற்கு நம்மிடம் உள்ளதோ அந்த அளவிற்கே நம் வாழ்க்கையும் அமையும். வாழ்க்கை பற்றிய கேள்வி எழுந்தால் ஒவ்வொரு நபருக்குமான பதிலும் வேறுபடும். அந்த பதில்களில் இருந்தே அவர்களது வாழ்க்கை தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.
அதிலும் குறிப்பாக பலரது பதிலும் என் வாழ்க்கை மிகவும் சோகமானது, வலிகள் நிறைந்தது என்று தான் சொல்லுவார்கள். நாம் அனைவரையும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கை சில நேரம் நமக்கான பாடங்களை மிகவும் அழுத்தமாகக் கற்றுக்கொடுக்கும்.
அந்தப் பாடங்களை நாம் நம்முடைய பிரச்சனையென நம்பினால் சோகம், கோபம், பயம் போன்ற உணர்வுகள் நமக்கு ஏற்படும். மாறாக அந்தப் பாடங்களை நம் அனுபவமென நம்பினால் தெளிவு, நம்பிக்கை, அமைதி போன்ற உணர்வுகள் ஏற்படுகிறது.
நாம் தேர்வு செய்வதைப் பொறுத்தே நம் வாழ்க்கையும் அமையும் என்பதை மட்டுமே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நல்லதாக எண்ணினால் நம் வாழ்தல் அழகானது என்பது மட்டும் சத்தியமான உண்மை. நல்லதை எண்ணுங்கள் வாழ்தல் அழகாக மாறும்.
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா. எல்லா பிரச்னைக்கும் ஒரு தீர்வு உண்டு!☺️