துணைத்தேர்வு தட்கல் கட்டணம் ரத்து
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 என, அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், சில பாடங்களில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களுக்கு ஜூன், ஜூலை மாதம் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படுகிறது
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்படும். இந்த அவகாசத்தை தாண்டி, மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றால், தத்கல் சிறப்பு கட்டணமாக, 1,000 ரூபாய் செலுத்த வேண்டும் இதை செலுத்த முடியாமல், பல மாணவர்கள் சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது இல்லை. இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், இனி ஜூன், ஜூலை சிறப்பு துணைத் தேர்வுக்கு, 15 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம் அதற்காக தட்கல் சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டாம் என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது