இணையவழி புத்தக கண்காட்சி துவக்கம் நவம்பர் 19ம் துவக்கம்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான, 'பபாசி' சார்பில், நவம்பர் 19ம் தேதி முதல், இணைய வழி புத்தக விற்பனை மற்றும் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
பபாசி சார்பில், சென்னையில் ஆண்டுதோறும் ஜனவரியில், 15 நாட்கள் புத்தக கண்காட்சி நடத்தப்படும். சென்னையில் நடக்கும் இந்த புத்தக கண்காட்சியில், 700க்கும் மேற்பட்ட அரங்குகளும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களும் இடம் பெறும். இதற்காக, உலகின் பல நாடுகளில் இருந்தும், நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும், புத்தக பிரியர்கள் வருகை தருவர்.
கொரோனா பரவல் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து புத்தக கண்காட்சிக்கு வர பலர் தயக்கம் காட்டுவதால், அவர்களுக்காக இணையவழியில் புத்தக கண்காட்சியை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்தன.இதையடுத்து, அடுத்த மாதம் 19ம் தேதி முதல், இணையவழி புத்தக கண்காட்சியை நடத்தும் முயற்சியில், 'பபாசி' நிர்வாகம் ஈடுபட்டுஉள்ளது.