நீங்கள் இப்படித்தான் என்றால்? அப்போ உங்கள் வாழ்க்கை வீண்!

நீங்கள் என்னால் ஓய்வாகவே இருக்க முடியவில்லை என்று சொன்னால்,
உங்களால் எந்த வேலையையும் யாருக்கும் தர முடியாமல் அனைத்தையும் நீங்களே செய்தால்,
நீங்கள் அடிக்கடி காலையில் இறுகப் பிடித்த கைகளுடன் எழுந்தால்,
நீங்கள் வழக்கமாகவே நாற்காலியின் முனையில் அமர்ந்தால்,
நீங்கள் சும்மா உட்கார்ந்திருக்க நேரும்போது எரிச்சல் அடைந்தால்,
எப்போதுமே நீங்கள் அவசரமாகவே இருந்தால்,
நீங்கள் எப்போதுமே உங்கள் பஸ்ஸையோ அல்லது ரயிலையோ கடைசி நிமிடத்திலேயே ஓடிச் சென்று பிடித்தால்,
நீங்கள் எப்போதுமே உங்கள் உதவியாளர் வேலையை முடிக்கும் வரை அவருடன் உட்கார்ந்திருந்தால்,
நீங்கள் எப்போதுமே மற்றவர் பேசுவதைக் கேட்கக் கஷ்டப்பட்டால்,
உங்கள் பேச்சே முதன் முதலாகக் கேட்கப்பட வேண்டும் என்று விரும்பினால்,
நிங்கள் எப்போதுமே எல்லோருடனும் எல்லாவற்றுடனும் பொறுமை இழப்பதை வழக்கமாகக் கொண்டால்,
நீங்கள் பேசும்போது யாரேனும் குறுக்கிட்டால் அப்போது எரிச்சல் அடைந்தால்,
நீங்கள் அனைத்து விஷயங்களையும் சரி பார்த்துக் கொண்டே இருந்து வேலையை ஆரம்பிக்கவில்லை என்றால்,
நீங்கள் எல்லாவற்றையும் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால்,
ஏதேனும் ஒன்று சற்றுத் தவறாகப் போனால் அப்போது மனத்தளர்ச்சி அடைந்தால்,
நீங்கள் எப்போதுமே யாரோ உங்களைக் கவனித்துக் கொண்டே இருப்பதாக உணர்ந்தால்,
நீங்கள் உங்களை யாரும் விமரிசிப்பதை விரும்பவே இல்லை என்றால்,
நீங்கள் உங்கள் செயல்களை யாரேனும் அங்கீகரிக்கவில்லை எனில் அப்போது அதிருப்தி அடைந்தால்,
நீங்கள் உங்களைத் தவிர்க்க முடியாத ஒருவர் என்று நினைத்தால்,
நீங்கள் எல்லாவற்றிலும் எப்போதுமே மிகவும் சிறப்பானவராக இருப்பதை விரும்பினால்,
நீங்கள் சிரித்து மகிழ்வோரை விரும்புவதே இல்லை என்றால்,
நீங்கள் உங்களை மனதால் காயப்படுத்தியவர்களை மறந்து மன்னிக்க முடியவில்லை என்றால்,
நீங்கள் உங்களைச் சுற்றி இருப்பவர்கள் கேலியும் கிண்டலுமாக ஜாலியாக இருப்பதை விரும்பவில்லை என்றால்,
நீங்கள் எப்போதுமே உங்கள் திட்டங்களை மற்றவர்கள் திருத்தினாலோ மாற்றினாலோ கூட்டினாலோ குறைத்தாலோ அதை அனுமதிக்க முடியவில்லை என்றால்,
நீங்கள் உங்கள் நேரத்தில் சிறிது நேரம் ஒரு கவிதையைப் படிப்பதிலோ இயற்கையை ரசிப்பதிலோ ஈடுபடுத்த முடியாமல் இருந்தால்,
நீங்கள் எப்போதுமே உங்கள் உணவை நின்று கொண்டோ அல்லது நடந்து கொண்டோ தான் சுவைப்பது வழக்கம் என்றால்,
நீங்கள் வழக்கமாகவே உங்கள் குடும்பத்தை விட்டு தூரத் தள்ளி இருப்பவராக இருந்தால்,
உங்களால் எந்தவிதமான சமூக விழாக்களிலும் பங்கெடுக்கவோ அல்லது சமூக சேவை செய்யவோ முடியவில்லை என்றால்,
உங்களுக்கு பிரார்த்தனை புரியவோ அல்லது கோவிலுக்குப் போகவோ நேரமே கிடைக்கவில்லை என்றால்.....
அப்போது என் அருமை நண்பரே,
இந்த உலகில் வாழவே தகுதியற்ற மன அழுத்தமுள்ள ஆள் ஐயா நீர்!
நீங்கள் உடலை சற்று ஓய்வாக வைத்திருப்பதை விரும்பி ஏற்று, அந்த நல்ல பழக்கத்தை ஊக்குவித்தால் உங்கள் மன அழுத்தத்திலிருந்து நீங்கள் விடுபட முடியும்.
மேலே பட்டியலிட்ட அனைத்திற்கும், ஓய்வெடுக்க வழி காண்பிக்கும் ஆக்கபூர்வமான பதிலைச் சொன்னால், அப்போது தான் அப்போது மட்டுமே நீங்கள் (ஓய்வான) அமைதியான மனிதராக இருக்க முடியும்!
நீங்கள் அமைதியாக இருப்பதை வழக்கமாகக் கொண்டால், நூறு வருடம் வாழ்ந்து வாழ்க்கையை அனுபவிக்கலாம்.
இந்த உலகமே உங்களுக்குச் சொர்க்கமாகி விடும்!