நவம்பர் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு 1-ம் வகுப்பு பயிலும் குழந்தைகளுடன் பெற்றோர்களும் இருக்கலாம்!
திருச்சி மாவட்டம் வையம்பட்டி பழையகோட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: நவம்பர் மாதம் 1-ந் தேதி, 1 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவ-மாணவிகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 1-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் முதல்-முறையாக பள்ளிக்கு வருகை தருகிறார்கள். அவர்கள் எவ்வாறு முககவசம் அணிவது, எவ்வளவு நேரம் அணிய வேண்டும் என்று தெரியாமல் இருப்பார்கள். ஆகவே, தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வந்து பள்ளி முடியும் வரை அவர்களுடன் உடன் இருக்கலாம். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு முககசவம் அணிய முடியாத நிலை ஏற்படும் போது எப்போது வீட்டுக்கு செல்ல நினைக்கிறார்களோ அப்போது செல்லலாம்.