மக்கள் பள்ளி திட்டம் அக்டோபர் 18ல் துவக்கம்
பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்தே படிக்கும் வகையில், 200 கோடி ரூபாய் செலவில், மக்கள் பள்ளி திட்டம், 18ம் தேதி துவங்கப்படுகிறது.
கொரோனா காரணமாக, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை. தனியார் பள்ளிகள் மட்டும், 'ஆன்லைன்' வகுப்பை நடத்தி வருகின்றன.இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்கள், 19 மாதங்களாக பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, அவர்களுக்கு கிராமம் தோறும், தன்னார்வலர்களை பயன்படுத்தி பாடம் நடத்தும், மக்கள் பள்ளி திட்டம், வரும், 18 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.தமிழக அரசின் சார்பில் 200 கோடி ரூபாய் செலவிலான வீட்டு பள்ளி திட்டத்தில், மக்கள் பள்ளி திட்ட செலவுகளையும் மேற்கொள்ள, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், நவம்பர்1ல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.