பொறியியல் கல்லூரிகளில் 7.5% உள் இட ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கட்டணம் விடுவிக்கப்பட்டுள்ளது
மொத்தம் 7,876 அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கட்டணமாக 74.28 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. தரச்சான்று பெறாத படிப்புகளுக்கு கல்விக் கட்டணமாக 50 ஆயிரம் ரூபாயும், தரச்சான்று பெற்ற படிப்புகளுக்கு 55 ஆயிரம் ரூபாயும், விடுதிக் கட்டணம் 40 ஆயிரம் ரூபாய் மற்றும் போக்குவரத்து கட்டணம் 25 ஆயிரம் ரூபாய் என கணக்கிடப்பட்டு அந்தந்த கல்லூரிகளிடம் அளிக்கப்படுகிறது. இதைத் தவிர அந்தக் கல்லூரிகள் வேறு எந்த கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.