10ம் வகுப்பு துணை தேர்வு நாளை(19/11/2021) தேர்வுமுடிவுகள் வெளியிடப்படும்
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்களுடைய தேர்வு முடிவினை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி முதல் தங்களுடைய தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல் துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டு உள்ளது. எனவே மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்களும் மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்.
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு வருகிற 22 மற்றும் 23-ந் தேதிகளில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த தகவல் அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.