03 நிகழ்கணத்தில் வாழ்வது எப்படி?
அனைவர் மனதிலும் ஏதோ ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும். அந்த குறையை சரி செய்வதற்காக மட்டுமே நாம் செயல்பட்டுக் கொண்டே இருப்போம். சிலருக்கு நான் உயராகமாக இல்லையே என வருத்தம் இருக்கும் சிலருக்கு நான் நல்ல நிறமாக இல்லையே என வருத்தம் இருக்கும், சிலருக்கு சொந்த வீடு இல்லையே என வருத்தம் இருக்கும், சிலருக்கு நல்ல வேலை இல்லையே என வருத்தமாக இருக்கும் இப்படி அவரவருக்கு ஏற்றவாறு பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்
கிட்டத்தட்ட தொன்னூறு சதவீதம் பேருக்கு மேல உள்ளவர்களுக்கு ஏதோ ஒரு குறை இருந்துகிட்டே இருக்கும். நான் உங்கள கேக்குற கேள்வி அதை உங்காளால மாத்த முடியுமா? நிச்சயமாக சில விஷயங்கள மாத்த முடியாதுன்னு தெரியும் ஆனா நம் மனத்தில் அதை மாற்றுவதற்கான சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும் என்ன நான் சொல்லுறது சரிதானே?
இதை மாற்ற நான் என்ன செய்ய வேண்டும்? எனக்கு கொடுக்கப்பட்ட அனைத்தையும் நன்றியுணர்வுடன் கொண்டாட வேண்டும். எதுவும், யாரும் நம் அருகில் இருக்கும்போது அந்த பொருளின் மதிப்போ அல்லது அந்த நபரின் மதிப்போ நமக்கு தெரியாது. ஒரு உண்மை சம்பம் எனது மாணவன் ஒருவன் எப்போதும் அவனது தாயை திட்டிக்கொண்டே இருந்துள்ளான். சில மாதங்களுக்கு முன்பு அவன் குடும்பத்தில் அனைவம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டனர். ஆனால் அந்த குடும்பத்தில் அவனுக்கு மட்டும் நோய் பாதிப்பு இல்லை அவன் குடும்பத்தில் உள்ள அனைவரும் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை சென்றுவிட்டனர். இம்மாணவன் மட்டும் வீட்டில் தனிமையில் வாடியுள்ளான் தனியாக சமைத்து சாப்பிட்டுள்ளான். அப்போதுதான் அவனுக்கு அவன் தாயின் மதிப்பு தெரிந்துள்ளது அவன் தாய் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதிலிருந்து அவன், அவனுடைய தாயை நன்றியுணர்வுடன் பார்க்க ஆரம்பித்துவிட்டான் தற்போது அவனது கல்வியிலும் முன்னேற்றம் அடைந்துள்ளான்.
எனக்கு கிடைத்தைவற்றை நன்றியுணர்வுடன் நோக்கும்போது. நான் நிகழ்கணத்திற்கு தூக்கி வீசப்படுகிறேன். நான் எனக்கு இல்லாதவற்றை சிந்திப்பது இல்லை நான் எனக்கு இல்லாதவற்றை சிந்திக்கும்போதுதான் என் மனம் எதிர்காலத்திற்கோ இறந்த காலத்திற்கோ செல்கிறது. எனக்கு இருப்பதை நன்றியுணர்வுடன் நோக்கும் போது என்மனம் நிகழ்கணத்தில் கொண்டாட்டத்தில் வாழ்கிறது. அவ்வாறு கொண்டாட்டத்தில் வாழ்பவர்கள் வாழ்வில் வெற்றிமேல் வெற்றி அடைவார்கள்.
அவ்வாறு வெற்றியடைந்தவர்கள் ஆஸ்திரேலியாவைதச் சார்ந்த நிக் உஜிக். அவருக்கு பிறவியிலேயே இரண்டு கைகளும் கிடையாது இரண்டு கால்களும் கிடையாது. அவர் அவருக்கு கிடைத்தவற்றுக்கு நன்றியுணர்வை வெளிப்படுத்தி தற்போது மாபெரும் ஊக்குவிப்பு பேச்சாளராக உருவெடுத்துள்ளார்.
மேலும் பாகிஸ்தானச்சார்ந்த முனிபா மசாரி. அவர் கணவருடன் காரில் செல்லும் ஏற்பட்ட விபத்தில் முதுகெலும்பில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யவே முடியவில்லை. அவர் கணவரும் விவாகரத்து செய்துவிட்டார் பலநாட்கள் தன் தாயின் அரவணைப்பில் படுக்கையிலே காலம் கழிந்தது பின்னர் தனக்கு கிடைத்தவற்றுக்கு நன்றி கூற ஆரம்பித்தபின் அவரும் ஊக்குவிப்பு பேச்சாளராக உருவெடுத்துள்ளார். தற்போது அவர் சக்கரநாற்காலியில் அமர்ந்தவாறு பேசிக்கொண்டிருக்கிறார்
நாம் நிகழ்கணத்தில் வாழும்போது மிகவும் சக்தியுடன் செயல்படுகிறோம். அவ்வாறு செயல்படும்போது வாழ்வில் முதலில் நிம்மதி கிடைக்கிறது பிறகு நம் மனம் தெளிவாக நிதானமாக செயல்பட்டு வெற்றிகளை குவிக்கிறது.
நன்றி வாழ்க வளமுடன்
ஆக்கம்
கல்விகுரு குழு
8608205243
குறிப்பு மாலை 5:00 மணிக்கு மேல் அழைக்கவும்