மனம் என்றால் என்ன?
எல்லாரும் அடிக்கடி சொல்லுற வார்த்தை மனசே சரியில்லை. மனம் என்றால் என்ன? யாராலனா விளக்க முடியுமானு கேட்டா ????????????????????????
மனம் என்பது மூளையின் ஒரு பகுதி என அறிவியல் சொல்கிறது. ஆனால் ஆன்மீகமோ மனம் என்பதே இல்லை என்று கூறுகிறது. என்ன இது நான் எதை நம்புவது அறிவியலையா ஆன்மீகத்தையா?
பொதுவாக மனம் என்பது சிந்திக்கப் பயன்படும் கண்ணுக்குத் தெரியாத நம்மை இயக்கும் கருவிதான் மனம் எனப்படும். நான் சொல்லுறத சிந்திக்க முடியுதா பாருங்க. லட்டு, இட்லி, தோசை, பரோட்டா, சப்பாத்தி, ஜாங்கிரி…….. என்ன சிந்திக்க முடிந்ததா? அனைவரின் பதில் ஆம் என்பதுதானே?
இப்போ இதை சிந்திக்க முடியுதா பாருங்க? சீனா உணவான டம்லிங்ஸ். உங்களால் டம்லிங்ஸ் பற்றி உங்களால் சிந்திக்க முடிகிறதா? நிச்சயமாக முடியாது காரணம் நீங்கள் அந்த உணவை உண்டது இல்லை இன்னும் ஆழமாக சொல்லப்போனால் அந்த உணவு உங்கள் அனுபவத்தில் இல்லை.
அப்போ மனம் என்பது நம் ஐம்புலன்களான கண், காது, மூக்கு, நாக்கு, உடல் ஆகியவற்றின் பதிவுகள். அப்போ மனம் எதை அதிகமாக சிந்திக்கிறது என்றால் நமக்கு கிடைத்த பதிவுகளை சிந்திக்கிறது என்ன நான் சொல்லுறது சரிதானே?
எனக்கு ஐந்து கேள்வி?
கண் பார்க்கிறதா?
காது பார்க்கிறதா? அல்லது கேட்கிறதா?
மூக்கு பார்க்கிறதா? அல்லது நுகர்கிறதா?
நாக்கு பார்க்கிறதா? அல்லது சுவைக்கிறதா?
உடல் பார்க்கிறதா? அல்லது உணர்கிறதா?
அனைவரின் பதில் என்னவாக இருக்கும்
கண் பார்க்கிறது
காது கேட்கிறது
மூக்கு நுகர்கிறது
நாக்கு சுவைக்கிறது
உடல் உணர்கிறது
என்றுதானே இருக்கும். நான் என்ன சொல்கிறேன் என்றால் அனைத்து புலன்களும் பார்க்கிறது. அது எப்படி பார்க்கிறது ஒரே குழப்பமாக இருக்கிறது எனத்தோன்றும் சரிதானே?
நாம் தினசரி பயன்படுத்தும் வார்த்தைகளை கவனிப்போமா?
நான் ஒரு பாடலைக் கேட்டேன் மிகவும் அருமையாக இருத்தால் நீங்கள் மற்றவர்களிடம் என்ன சொல்வீர்கள் பாட்டு மிகவும் அருமையாக இருந்தது கேட்டுப்பார் எனச் சொல்வீர்கள்தானே? வார்தையை கவனித்து பார்த்தால் தெரியும் கேட்டுப்பார் என்றால் காது பார்க்கிறதா இல்லையா?
அது போலத்தான் மற்ற புலன்களுக்கும் நுகர்ந்துபார், உணவில் உப்பு இருக்கிறதா பார், காய்ச்சல் அடிக்கிறதா பார் என அனைத்திற்க்கும் நாம் பயன்படுத்தும் வார்த்தை பார் என்பதுதானே?
பார் என்ற வார்தை கண்ணுக்கு மட்டும் உரியது இல்லை ஐம்புலன்களுக்கு உரியதுதானே? அதுவும் இல்லை ஐம்புலன்களின் பதிவு இடமான மனதின் வேலையே பார்ப்பது.
நாம் தூங்கும்போது எங்கு இருக்கிறோம் எப்படி இருக்கிறோம் என உணர்ந்திருக்கிறோமா நிச்சயமாக இல்லை. நாம் தூங்கும்போது மனம் முற்றிலும் இல்லாமல் போய் விடுகிறது. நாம் உலகத்தினுடன் தொடர்பு கொள்வது மனம் மூலமாக மட்டுமே(ஐம்புலன்ள் வழியாக)
நாம் நமக்கு கிடைத்த ஐம்புலப்பதிவுகளை தேவையில்லாமல் சிந்தித்து கல்வி கற்க்கும்போது பின்தங்கிவிடுகிறோம். நாம் நமக்கு கிடைத்த பதிவுகளை எப்படி சரியாக சிந்திப்பது. எப்படி கல்வியில் உயர்வது போன்றவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்
நன்றி வாழ்க வளமுடன்
ஆக்கம்
கல்விகுரு குழு
8608205243
குறிப்பு மாலை 5:00 மணிக்கு மேல் அழைக்கவும்