கருப்பு திராட்சை சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா? வியக்க வைக்கும் புதிய ஆராய்ச்சி முடிவு!
இன்றைய சூழலில் காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்க செல்லும் வரை எப்போதும் டென்ஷனாகவே இருப்பதால் மனச் சோர்வு அதிகரித்து மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த மனச் சோர்வு ஏற்படாமல் இருக்கக் கருப்பு திராட்சை சாப்பிடுவது ஒரு நல்ல தீர்வு என சமீபத்திய ஆய்வில் கண்டறிய பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மருத்துவ பத்திரிகை ஒன்றில் வெளியான இந்த ஆய்வு முடிவில் திராட்சையில் இயற்கையாகவே உள்ள கலவைகள் மனச் சோர்வை கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது எனத் தெரிய வந்துள்ளது. திராட்சையில் இருக்கும் மல்விடின்-3-ஒ-குளுக்கோசைட் மற்றும் டைஹைட்ரோகாஃபிக் என்னும் அமிலம் ஆகிய இரண்டும் மனச் சோர்வு சிகிச்சைக்கான ஒரு சிறந்த மருந்தாகப் பார்க்கப்படுகிறது.
இப்போதிருக்கும் வழக்கமான மனச் சோர்வுக்கான சிகிச்சை முறையில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே தற்காலிக தீர்வுகூட கிடைப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் இதை விட மேலான நிரந்தர தீர்வைத் தரக்கூடிய பக்க விளைவுகள் ஏதும் இல்லாத ஒரு மாற்று மருத்துவத்தைக் கண்டுபிடிப்பதற்கான தேவை அதிகம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் இந்த மனச் சோர்வு பிற்காலத்தில் நமது உடலில் பல நோய்கள் உருவாக ஒரு முக்கிய காரணமாக மாறிவிடுகிறது.
எப்படியென்றால் இந்த மனச் சோர்வு நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கி அதில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நோய் தாக்குதலில் இருந்து நம்மைப் பாதுகாக்க நியூரான் ஒரு மின் அல்லது வேதியில் சார்ந்த சமிக்ஞை ஒன்றைச் செலுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. இப்போது இருக்கும் மனச் சோர்வை கட்டுப்படுத்தும் சிகிச்சிகள் பெரும்பாலும் செரடோனின், டோபமைன் மற்றும் பிற நரம்பியக்க கடத்திகளை ஒழுங்கு படுத்துவதோடு தொடர்புடையது. ஆனால் இந்தச் சிகிச்சைகள் ஏற்பட்டுள்ள வீக்கத்தைக் குறைக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இந்த ஆய்வில் திராட்சையில் அதிகம் இருக்கும் பாலிஃபினால் மனத் தளர்ச்சியை நிச்சயம் கட்டுப்படுத்தும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்தச் சிகிச்சை முறைக்கான வழி முறைகள் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து வருகின்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட கான்கார்ட் திராட்சையின் சாறு, திராட்சை விதைகளில் இருந்து எடுக்கப்பட்ட சாறு மற்றும் டிரான்ஸ்-ரெஸ்வெராட்ரால் உட்படத் திராட்சையில் இருந்து பெறப்பட்ட இந்த மூன்று விதமான பாலிஃபினோல் பொருட்களின் கலவையை எலிகளுக்குக் கொடுத்து மன அழுத்தத்தை உண்டாக்கும் மனச் சோர்வை எதிர்க்கும் திறனை ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.
எலிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் டி.எச்.சி.ஏ/மால்-குளூக் ஆகிய மந்தமான சுழற்சியை மாற்றியமைப்பதன் மூலம் இவை ஊக்குவிக்கப்பட்டு சிஸ்ட்டுகள் சிதைக்கப்படுவது தெரியவந்துள்ளது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த எலிகளின் உயிரணுக்களில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் எலும்பு மஜ்ஜையில் உள்ள பியோனிஃபியல்கள் தூண்டப்பட்டு மனச் சோர்வு-போன்ற பிரச்னைகள் கட்டுப்படுத்தப்படுவது நிரூபணம் ஆகியுள்ளது.
இந்த ஆய்வில் முதல் முறையாக மன அழுத்தச் சிகிச்சைக்காக டி.என்.ஏ எபிகேனடிக் மாற்றியமைக்கப்பட்டுத் தீர்வை காண முயற்சி செய்துள்ளனர். மன அழுத்தத்தில் இருந்து விடுபடப் பல மாத்திரைகளை விழுங்குவதற்குப் பதிலாக நாம் உண்ணும் உணவையே மருந்தாக்கித் தீர்வு காண்பது என்றுமே புத்திசாலித்தனம் தான்.