தொப்புளைச் சுற்றி எண்ணெய் தேய்த்தால் அழகோடு ஆரோக்கியமும் சேர்ந்து மேம்படும்!
ஒரு உயிரின் தொடக்க புள்ளியாகக் கருதப்படுவது தொப்புள். அனைத்துப் பாலூட்டி உயிரினங்களுக்கும் தொப்புள் இருந்தாலும் மனிதர்களுக்கு மட்டுமே இது தெளிவாக தெரியும்படி அமைந்திருக்கிறது. தாயின் வயிற்றில் சேய் இருக்கும் போது அவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாகவும் இது விளங்குகிறது.
அப்படிப் பார்த்தால் நம் அனைவரது வாழ்வும் ஆரம்பமாகும் இடம் அது தான். அந்த ஆரம்ப புள்ளியில் நாம் எதைச் செய்தாலும் அதன் பாதிப்பு நமது உடல் முழுவதும் ஏற்படும் என்பது உண்மைதானே. அதனால் தான் ஒவ்வொரு வாரமும் உச்சந்தலை மற்றும் தொப்புளில் எண்ணெய் தேய்த்து தலைக்குக் குளிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
அதே சமயம் தொப்புளில் ஒவ்வொரு வகையான எண்ணெய் தேய்ப்பதன் மூலம் வெவ்வேறு விதமான பலன்களை நாம் பெற முடியும். எந்தெந்த எண்ணெய்க்கு எதன் மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போமா?
வேப்ப எண்ணெய்:
தினமும் 3 அல்லது 4 முறை தொப்புளை சுற்றித் தேய்க்க வேண்டும்.
பொதுவாகவே நமது அழகிற்கும் சரி ஆரோக்கியத்திற்கும் சரி வேப்ப இலையால் பல நன்மைகளைத் தர முடியும். பொலிவான சருமம் பெற, கண் தொடர்பான பிரச்னைகள் தீர, வயிற்றுக் கிருமிகள் மற்றும் புழுக்களை கொல்ல என வெப்ப மரத்தின் பயன்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
வேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் வேப்ப எண்ணெய்யைத் தொப்புளை சுற்றித் தடவுவதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பருக்கள், தேம்பல்கள் ஆகியன நீங்கும். மேலும் முடி உதிர்வு போன்ற பிரச்னைகளுக்கும் ஒரு நல்ல தீர்வாகும்.
பாதாம் எண்ணெய்:
தினமும் 2 அல்லது 3 முறை தொப்புளை சுற்றி மசாஜ் செய்ய வேண்டும்.
நமது உடலுக்கு மிகவும் தேவையான சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஊட்டச்சத்தான ‘வைட்டமின் ஈ’ பாதம் கொட்டையில் அதிகம் நிறைந்துள்ளது. இந்த எண்ணெய்யைத் தினமும் தொப்புளைச் சுற்றி தேய்ப்பதன் மூலம் முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாத்து சரும பொலிவும் அதிகரிக்கும். முகம் பளிச்சிட மற்றும் கூந்தல் மிருதுவாக பாதாம் எண்ணெய் பயன் படுத்துவது நல்ல பலனை தரக் கூடியது.
தேங்காய் எண்ணெய்:
வாரம் 3 முறை தொப்புளை சுற்றித் தேய்த்தால் போதும்.
தேங்காய் எண்ணெய்யைத் தேய்ப்பதன் மூலம் கர்ப்பப் பை வலுப்பெற்று குழந்தை பேறு பிரச்சினைகள் நீங்கும். சரியாக மாதவிலக்கு இல்லாதவர்கள் தங்களது தொப்புளைச் சுற்றி சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவுவதால் 28 நாட்கள் சுழற்சியும் சீராக இயங்கும்.
கடுகு எண்ணெய்:
தினமும் 2 அல்லது 3 முறை தொப்புளில் தடவவும்.
கடுகு எண்ணெய் தேய்ப்பதன் மூலம் குடல் அடைப்பு போன்ற பிரச்னைகள் தீர்ந்து செரிமானத்தை அதிகரிக்கும். மேலும் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் பெருக்கும்.
வெண்ணெய்:
ஒரு நாளைக்கு ஒரு முறை தொப்புளை சுற்றித் தேய்த்தால் போதும்.
சுத்தமான பசும் பாலில் இருந்து எடுத்த வெண்ணெய்யைத் தொப்புளில் தடவுவதன் மூலம் சருமம் ஊட்டச்சத்து அடைந்து மிருதுவாக மாரும். பொதுவாகவே முகத்தில் வெண்ணெய்யைத் தேய்ப்பதன் மூலம் குழந்தையை போன்ற மிகவும் மென்மையான சருமத்தை பெற இயலும்.
ஒரு ஆராய்ச்சியில் நமது தொப்புளில் மட்டுமே 2,200-க்கும் அதிகமான பாக்டீரியா கிருமி வகைகள் இருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஆகையால் தினமும் எண்ணெய் தேய்ப்பதன் மூலம் தொப்புளில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்வதால் கிருமிகளின் தாக்கமும் குறையும்.
72,000-த்திற்கும் அதிகமான நரம்புகள் தொப்புளில் வந்து இணைகிறது. இது தொப்புளே நமது மொத்த உடலின் மையப் புள்ளி என்பதை நமக்கு உணர்த்துகிறது. இதில் செய்யும் எந்தவொரு வைத்தியமும் முழு உடலையும் சென்றடையும் என்பதற்கு இதைவிட வெறு எந்தச் சான்றும் தேவையில்லை.