விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த இலவசமாக கிடைக்கும் தலைசிறந்த மென்பொருள்கள்
கணினி அல்லது லேப்டாப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் இயங்குதளமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இருக்கிறது. ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை போன்றே கணினிகளில் விண்டோஸ் இயங்குதளம் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்குதளங்கள் பயன்படுத்த எளிமையாக இருப்பதோடு பல்வேறு இலவச செயலிகளையும் வழங்குகிறது.
ஃபயர்ஃபாக்ஸ்(Mozilla Firefox):
விண்டோஸ் இயங்குதளத்தில் வழங்கப்படும் பிரவுசர்களையே இன்றும் பயன்படுத்துபவர் எனில், உங்களுக்கு ஏற்ற பிரவுசராக ஃபயர்ஃபாக்ஸ் இருக்கிறது. எளிமையான அம்சங்கள், வேகமாக இயங்குவதோடு பாப்அப்களையும் பிளாக் செய்யும் திறன் கொண்டுள்ளது.
தண்டர்பேர்ட்(Mozilla ThundarBoard):
அதிகப்படியான அம்சங்கள் நிறைந்த மின்னஞ்சல் மென்பொருளாக தண்டர்பேர்ட் இருக்கிறது. மேலும் இணையத்தில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் மால்வேர் தாக்குதல்களை அனுமதிக்காமல், கோளாறான இணையதளங்கள் சார்ந்த தகவல்களை வழங்கும். மேலும் இது மெமரி குறைவாக இருப்பதோடு வேகமாகவும் இருக்கிறது.
சிகிளீனர்(Ccleaner):
கணினியின் வேகம் குறைவாக இருக்கிறதா? கணினியின் வேகத்தை அதிகரிக்க சிகிளீனர் கொண்டு கணினிகளை ஸ்கேன் செய்யலாம் இவ்வாறு செய்யும் போது கணினியில் உள்ள தேவையற்ற தரவுகளை அழித்து மெமரியை அதிகரித்து கணினியின் வேகத்தை சீராக்கும்
ரெக்குவா(Reccuava):
ரெக்குவா மென்பொருள் கொண்டு கணினியில் சேமித்து வைக்கப்பட்டு தவறுதலாக அழிந்து போன தரவுகளை மீட்க முடியும். மற்ற ரிக்கவரி மென்பொருள்களை விட ரெக்குவா எளிமையான யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது.
வி.எல்.சி. மீடியா பிளேயர்(VLC Media Player):
கணினி வாங்கியதும் பெரும்பாலானோர் முதலில் இன்ஸ்டால் செய்யும் மென்பொருளாக வி.எல்.சி. மீடியா பிளேயர் இருக்கிறது. அனைத்து விதமான ஆடியோ மற்றும் வீடியோ ஃபைல்களையும் இயக்குவதோடு எளிய யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது.
அடோப் ரீடர் மற்றும் பிளாஷ் பிளேயர்(Adobe Reader & Flash Player)
இ-புத்தகங்களை வாசிப்பவர்களுக்கும், அடிக்கடி PDF ஃபைல்களை பயன்படுத்துவோருக்கு ஏற்ற செயலியாக அடோப் ரீடர் இருக்கிறது. மேலும் பிளாஷ் வீடியோக்களை கணினியில் இயக்க பிளாஷ் பிளேயர் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
டீம் வியூவர்(Team Viewer):
டெஸ்க்டாப் கணினிகளை மற்றொரு கணினி மூலம் உலிகன் எந்த பகுதியில் இருந்தும் இயக்க தலைசிறந்த செயலியாக டீம் வியூவர் இருக்கிறது.
சைபர்கோஸ்ட் விபிஎன்(CyberGhoast VPN):
உங்களது கணினியின் உண்மையான ஐ.பி. முகவரியை மறைத்து எந்நேரமும் பிரவுசிங் செய்ய விரும்பினால் இந்த செயலி தலைசிறந்த ஒன்றாக இருக்கிறது. இதே சேவையை வழங்குவதாக பல்வேறு பிராக்ஸி மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கிறது.
7சிப்(7 Zip):
இந்த மென்பொருள் தரவுகளை கம்ப்ரெஸ் மற்றும் அன்கம்ப்ரெஸ் செய்ய உதவியாய் இருக்கிறது. பெரும்பாலான தரவுகளை டவுன்லோடு செய்யும் போது .zip வகையை சேர்ந்த தரவுகளாக இருக்கிறது.
கீஸ்கிராம்ப்ளர்(Key scrmbler):
ஆன்லைனில் உங்களது பாஸ்வேர்டுகள் மிகவும் பாதுகாப்பாக இருக்குமா என்பது சந்தேகமான ஒன்று தான். இதுபோன்ற தருணங்களில் உங்களது பாஸ்வேர்டுகளை பாதுகாப்பாக வைக்க இந்த மென்பொருள் தலைசிறந்த ஒன்றாக இருக்கிறது.
மால்வேர் பைட்(MalwareBites)
இந்த மென்பொருள் கணினியில் பாதிக்கப்பட்ட தரவுகளை ஸ்கேன் செய்து அவற்றை அழிக்கும் திறன் கொண்டுள்ளது. மேலும் கணினியின் வேகத்தை சீராக வைக்க இந்த செயலி பயன்தரும் ஒன்றாக இருக்கிறது.
ஜிம்ப்(ZIMP):
இண்டர்நெட்டில் இலவசமாக கிடைக்கும் எடிட்டிங் மென்பொருளாக ஜிம்ப் (GIMP) இருக்கிறது. அடோப் போட்டோஷாப் போன்றே இருக்கும் இந்த மென்பொருள் சீராக இயங்குவதோடு சிறப்பாக செயல்படுகிறது.
ஆடாசிட்டி(Audacity)
இந்த மென்பொருள் மூலம் எடிட்டிங் செய்வதோடு, ஆடியோ எடிட்டிங் மற்றும் ஆன்லைனில் ஆடியோக்களை பதிவு செய்து பின்னர் பாட்காஸ்டில் கேட்க முடியம்.
யு டொரன்ட்(Utorrent)
டொரன்ட் ஃபார்மேட்டில் உள்ள அனைத்து தரவுகளையும் டவுன்லோடு செய்ய உதவும் மென்பொருளாக யுடொரன்ட் இருக்கிறது. இந்த மென்பொருள் கொண்டு அனைத்து தரவுகளையும் டவுன்லோடு செய்யலாம்.
ஆண்டிவைரஸ்(Anti Virus)
கணினியில் நல்லதொரு ஆண்டிவைரஸ் மென்பொருளை இன்ஸ்டால் செய்வது ந்லலது. இவை கணினிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் மால்வேர்களை கணினியில் நுழைய விடாமல் தடுக்கும். இத்தகைய பணியினை அவாஸ்ட், ஏவிஜி, நார்டான் இண்டர்நெட் செக்யூரிட்டி உள்ளிட்டவை செய்கின்றன.
கே-லைட்(K-lite codec)
கோடெக் பேக் கணினி அல்லது லேப்டாப்பில் உள்ள அனைத்து தரவுகளையும் இயக்க இந்த செயலி தலைசிறந்த ஒன்றாக இருக்கிறது. அனைத்து வகையான ஆடியோ மற்றும் வீடியோக்களை மேம்படுத்தும் பணியினை கே-லைட் கோடெக் செய்கிறது.
நோட்பேட்++(Notepad++) :
இணையம் சார்ந்த செயலிகள் மற்றும் இணையதளங்களை உருவாக்க இந்த செயலி வழி செய்யும். இதில் HTML, ஜாவாஸ்கிரிப்ட், பைத்தான், சி.எஸ்.எஸ். உள்ளிட்ட மொழிகளை இயக்க முடியும்.
பைல்சில்லா (FileZilla):
FTP தரவுகளை மற்றொரு கணினிக்கு வேகமாக அனுப்ப பைல்சில்லா தலைசிறந்த செயலியாக இருக்கிறது.
ட்ரூக்ரிப்ட்(TRUE CRYPT)
இந்த மென்பொருள் கொண்டு மெமரி ஸ்டிக்களை அதிக பாதுகாப்பான என்க்ரிப்ட்டெட் டேட்டாவாக மாற்றும். இதனால் தரவுகளை அதிக பாதுகாப்பாக மாற்றுவதோடு தரவுகளை இழக்க வேண்டிய அவசியமும் இருக்காது.