அன்டார்டிகாவில் பனியின் தடிமன் அதிகரிக்கிறது : நாசா ஆய்வில் தகவல்
தென் துருவமான அன்டார்டிகாவில் பனி வேகமாக உருகி வருகிறது என இதுவரை வெளிவந்துள்ள ஆய்வு முடிவுகள் எச்சரித்து வரும் நிலையில், அங்கு பனிப்போர் வையின் தடிமன் அதிகரித்து வருகிறது என நாசாவின் புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அன்டார்டிகாவின் பனிப் பாறைகள் உருகி தடிமனை இழந்து வருகின்றன. அங்கு சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிகழ்ந்து வரும் பனிப்பொழிவு, தற்போது அந்த இழப்பை ஈடு செய்யும் அளவுக்கு திரண்டு வருகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
அன்டார்டிக் தீபகற்பம் போன்ற பகுதிகளில் பனியின் பரப்பு கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என நாசா ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாறுபாடுக ளுக்கான பன்னாட்டு அரசின் கூட்டமைப்பு (ஐபிசிசி) 2013-ம் ஆண்டு வெளி யிட்ட அறிக்கையில், அன்டார்டிகா பரவலாக தன் பனிபரப்பை இழந்து வருகிறது எனத் தெரிவித்திருந்தது. இந்த ஆய்வு உட்பட பல்வேறு ஆய்வுகளின் முடிவுக்கு மாறாக, நாசாவின் புதிய ஆய்வு முடிவு அமைந்துள்ளது.
நாசா செயற்கைக்கோள் தரவு களின்படி, 1992-2001-ம் பனி ஆண்டுகளில் அன்டார்டிகாவின் பனிப்பரப்பில் 11,200 கோடி டன் நிகர பனிக்குவியல் சேர்ந்துள்ளது.
அதேசமயம் இந்த அளவீடு, 2003-2008-ம் ஆண்டுகளில் 8,200 கோடி டன்களாக உள்ளது.
நாசா பனியாறியல் ஜே ஜுவாலி கூறும்போது, “அன்டார்டிக் தீப கற்பம், மேற்கு அன்டார்டிகாவின் த்வைட் பகுதியிலும் பைன் தீவு பகுதியிலும் பனியிழப்பு அதிகரித்துள்ளது எனக்கூறும் ஆய்வு முடிவுகளோடு ஒத்துப்போகிறோம்.
ஆனால், கிழக்கு அன்டார்டிகா மற்றும் மேற்கு அன்டார்டிகாவின் உள்பகுதியில் இந்த ஆய்வு முடிவுகள் வேறாக இருக் கின்றன.
இப்பகுதிகளில் மற்ற பகுதி களில் காணப்படும் பனியிழப்பை விட பனி சேர்க்கை உபரியாக இருக்கிறது. ஆனால், அன்டார் டிகாவில் பனிச் சேர்க்கை விகிதம் மாறுபாட்டை ஏற்படுத்துவதற்கு இன்னும் சில பத்தாண்டுகள் தேவைப்படும்” எனத் தெரிவித்தார்.
ஐரோப்பிய விண்வெளி மையத்தின் இரு செயற்கைக் கோள்கள், நாசாவின் ‘ஐஸ்சாட்’ செயற்கைக்கோள்களின் மூலம், அன்டார்டிகாவின் பனிப்போர் வைகளின் உயரத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆய்வுக்கு உட்படுத் தப்பட்டன. அதனடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.
“இறுதி பனியுகத்தின் கடைசி காலத்தில், காற்று வெதுவெதுப் படைந்து, இக்கண்டம் முழுவதும் ஈரப்பதத்தை பரவலாக்கியது. இதன் மூலம், பனிப்பொழிவை இரண்டு மடங்காக அதிகரித்தது” என ஜுவாலி தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆயிரம் ஆண்டு களுக்கு முன் கூடுதல் பனிப் பொழிவு தொடங்கியது. அதனால், பனிப்படலத்தின் மேல் பனி குவியத் தொடங்கி, பல்லாயிரமாண்டுகளில் திடமாக மாறத் தொடங்கியது.
இந்த மாறுதல், கிழக்கு அன்டார்டிகா மற்றும் மேற்கு அன்டார்டிகாவின் உட்பகுதியில் ஆண்டுக்கு 0.7 அங்குலம் என்ற அளவில் பனியின் தடிமனை அதிகரிக்கச் செய்கிறது.
இந்த சிறிய அளவிலான தடிமன் அதிகரிப்பு, ஆயிரக்கணக் கான ஆண்டுகளாக நீடித்து, இப்பிராந்தியத்தில் விரிவான பரப்பில் மிக அதிகமான பனிச் சேர்க்கைக்குக் காரணமாகிறது.
“கடல்மட்ட உயர்வில் தற்போது அன்டார்டிகாவின் பங்களிப்பு ஏதுமில்லை என்பது மிக நல்ல செய்தியாகும். ஆனால், ஆண்டுக்கு 0.23 மில்லிமீட்டர் அளவு கடல் பின்வாங்குவது நல்ல செய்தி அல்ல.
ஆண்டுக்கு 0.27 மில்லிமீட்டர் அளவுக்கு கடல் மட்டம் உயர் வதற்கு அன்டார்டிகா காரணமாக இருக்கிறது என ஐபிசிசி அறிக்கை கூறுகிறது.
ஆனால், அதற்கு அன்டார்டிகா காரணமில்லை. கடல் மட்டம் உயர்வுக்கு வேறு காரணம் இருக்க வேண்டும்” என ஜுவாலி தெரிவித்துள்ளார்.