நலம் தரும் நடைப்பயிற்சி
இன்றைய நவீன உலகில், ஓடிஓடி வேலை செய்தாலும் அவ்வப்போது நம்மை சோம்பலும், மறதியும் மற்றும் நோய் தாக்குதலும் சூழ்ந்து கொண்டுவிடுகிறது. அதில் இருந்து தப்பிக்க ஒரே வழி நடை பயிற்சியே சிறந்தது.
உடல் உழைப்பு, விளையாட்டு, உடற்பயிற்சிகள் ஆகியவற்றில் ஈடுபட முடியாதவர்களுக்கு அற்புதமான வாய்ப்புதான் நடை பயிற்சி. நமக்கு, கராத்தே, யோகா, உடற் பயிற்சிகள், ஓட்டம், பல்வேறு விளையாட்டுக்கள் போன்றவைகளை விட நடை பயிற்சி மிகவும் எளிது.
நல்ல நடை பயிற்சி, மன இறுக்கம், மன அழுத்தத்தைப் போக்குகிறது. மனதிற்கு மகிழ்ச்சி தரும், நலம் தரும் ஹார்மோன்களை சுரக்கச் செய்யும். உடல் செயல்பாடுகள் மேம்படும். நன்றாகப் பசி எடுக்கும். நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.
உடல் சோர்வை குறைத்து, வலிமை தருகிறது. யாரும் எங்கும் நடக்கலாம், எந்த வயதிலும் நடக்கலாம். எப்போதும் நடக்கலாம்.
குறிப்பாக, பெண்கள் மற்றும் நோய் தாக்குதலில் மீண்டு வருபவர்களுக்கு மிகவும் எளிமையானது.
தினசரி நடை பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் இதோ…
உடல், மனச்சோர்வைக் குறைக்கிறது.
முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது.
கண் பார்வையை கூர்மைப்படுத்துகிறது.
நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்.
நாளமில்லாச் சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்.
அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது.
அடிவயிற்றுத் தொப்பையைக் குறைக்கிறது.
மூட்டுகளை இலகுவாக்குகிறது.
எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது.
கால்களையும், உடலையும் உறுதியான அமைப்பில் வைக்கிறது.
நல்ல தூக்கம் வர உதவுகிறது.
‘கொலஸ்ட்ரால்’ அளவைக் குறைக்கிறது.
மாரடைப்பு, சர்க்கரை நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
தினமும் சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டால் போதும். ஆரோக்கியம் நம்முடன் எப்போதும் இருக்கும். விரட்டினால்கூட போகாது. அந்த அளவு நன்மை தருகிறது நடைபயிற்சி.
எனவே, இன்றே தொடங்கலாம் நடைபயிற்சியை. ஏற்கனவே, தொடங்கி பயிற்சி மேற்கொண்டவர்கள் மகிழ்ச்சியோடு இன்னும் சில நிமிடங்கள் அதிகப்படுத்தலாம். இயற்கை கொடுத்துள்ள அற்புத வரம் தான் நடை பயிற்சி.