இந்திய ராணுவத்தைப் பற்றிய வியக்க வைக்கும் தகவல்கள்
- உயரமான போர்க்களத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது : உலகிலேயே உயரமான போர்க்களம் என்று கருதப்படும் சியாச்சின் கிளேசியர் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 5,000 மீட்டர்களுக்கும் மேலாகும்.
- தன்னார்வம் அதிகம் : உலகிலேயே அதிகமான தன்னார்வ வீரர்கள் கொண்ட ராணுவப்படை இந்தியாவுடையது என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.
- மலைப்பகுதிகளிலும், உயரமான பகுதிகளிலும் செயல்படுவதில் நமது இந்திய ராணுவ வீரர்கள் உலகளவில் சிறந்து விளங்குகின்றனர்.
- கடந்த 2013ஆம் ஆண்டு உலகிலேயே மிகப்பெரிய மீட்புப் பணியாகக் கருதப்படும் ஆப்ரேஷன் ராஹத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தவர்கள் நமது ராணுவப்படை வீரர்கள். இது, உத்தரகாண்ட் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக் காரணமாக நடந்தது.
- கேரளத்தில் இருக்கும் எழிமலாக் கப்பற்படைதான் கப்பற்படைப் பிரிவில் ஆசியாவிலேயே பெரியது ஆகும்.
- உலகிலேயே மிகவும் பழைய படையாக கருதப்படும் மூன்றில் ஒன்றான (யானை, தேர், குதிரை) குதிரைப்படை இன்னமும் இந்திய ராணுவத்தில் செயல்பட்டு வருவது பெருமைக்குரிய விஷயமாகும்.
- இந்திய ராணுவம் கட்டமைத்த பெய்லி பாலம் தான் உலகிலேயே ராணுவ வீரர்களால் மிக உயரத்தில் கட்டப்பட்ட பாலம் ஆகும். இது கடந்த 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டமைக்கப்பட்டது ஆகும்.
- கடந்த 1971ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போரில் 93,000 எதிரி நாட்டு (பாகிஸ்தான்) வீரர்கள் சரணடைந்ததே, ஓர் போரில் சரணடைந்த, ஓர் போரில் சரணடைந்த வீரர்களின் அதிகப்படியான எண்ணிக்கை ஆகும்.
- உலகிலேயே பெரிய ராணுவப் பிரிவுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அமெரிக்காவும் சீனாவும் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளன. நமது நாட்டில் 13,25,000 பட்டாளங்களும், 9,60,000 ரிசர்வ் படைகளும் இருக்கின்றன.
- உலகிலேயே சிறந்த ஏவுகணைகளில் இந்தியாவின் அக்னி ஏவுகணையும் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.
- வேகமான ஏவுகணை பிரமோஸ்2 என்ற நமது ஏவுகணைதான் உலகிலேயே வேகமான ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஆகும்.
- இந்திய ராணுவப்படை கடந்த 1776ஆம் ஆண்டு கிழக்கிந்திய நிறுவனத்தினால் கொல்கத்தாவில் துவங்கப்பட்டது.
- உலக அமைதிக்காக ஐ.நா.விற்கு பங்களிப்புதரும் பட்டாளங்களில் இந்திய பட்டாளம்தான் பெரியது என்பது பெருமைக்குரியது.