எங்கேயும், எப்போதும்... மடக்கி எடுத்துச் செல்லும் வசதியுடன் ஓர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!
வெளியூர் செல்லும்போதும், அலுவலக விஷயமாக அலையும்போதும் ஆட்டோரிக்ஷா, டாக்சி இல்லையென்றால் பஸ் பிடித்து செல்ல வேண்டியிருக்கிறது. அவ்வாறு அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்கள் தனியாக செல்லும்போது இந்த டாக்சி, பஸ், ஆட்டோ ரிக்ஷாக்களுக்கா செலவிடும் தொகை, அலைச்சல், நேரம் உள்ளிட்டவை எரிச்சலை ஏற்படுத்தும். அவ்வாறு இல்லாமல், உங்களது சொந்த ஸ்கூட்டரை கையிலேயே எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வசதி இருந்தால் சந்தோஷம்தானே. அவ்வாறு நினைப்பவர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் விதத்தில் ஓர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளனர். மோவியோ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எங்கு வேண்டுமானாலும் மடக்கி வைத்து எளிதாக எடுத்துச் செல்ல முடியும். அது எப்படி என்பதை விளக்கும் படங்களையும், தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.
தயாரிப்பு நிறுவனம் ஹங்கேரி நாட்டை சேர்ந்த அன்ட்ரோ குழுமம்தான் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கியிருக்கிறது. சோதனைகளுக்காக உருவாக்கப்பட்ட புரோட்டோடைப் மாடலைத்தான் படங்களில் வழங்கியுள்ளோம்.
சுற்றுச்சூழல் மாசு சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைக்காத போக்குவரத்துக்காக இந்த ஸ்கூட்டரை உருவாக்கியிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும், இந்த ஸ்கூட்டரை வணிக ரீதியில் கொண்டு செல்வதற்கு முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
ஸ்கூட்டர் எடை வெறும் 25 கிலோ எடையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. கார்பன் கலப்பு உலோகத்திலான மோனோகாக் பாடியுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், சக்கரங்கள்,
ஸ்கூட்டர் எடை வெறும் 25 கிலோ எடையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. கார்பன் கலப்பு உலோகத்திலான மோனோகாக் பாடியுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், சக்கரங்கள், ஹேண்டில்பார் என அனைத்தும் கவர் செய்யப்பட்டிருப்பதால், மடக்கி எடுத்துச் செல்லும்போது எந்த தொந்தரவும் இருக்காது. இழுவை
மின் மோட்டார் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் இருசக்கரங்களிலும் தலா ஒரு மின் மோட்டார் கொடுக்கப்பட்டிருக்கிது. இவை மிகச்சிறப்பான செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரேஞ்ச் முழுமையாக சார்ஜ் ஆவதற்கு ஒருமணி நேரம் பிடிக்குமாம். ஒருமுறை சார்ஜ் செய்தால் 35 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். மணிக்கு 45 கிமீ வேகம் வரை அதிகபட்சமாக தொடும் திறன் கொண்டது.
எளிதாக மடக்கலாம்... இந்த ஸ்கூட்டரை இரண்டு பாகங்களாக எளிதாக மடக்கலாம். வெறும் 2 நிமிடங்களில் மடக்கவும், மீண்டும் சேர்க்கவும் முடியுமாம்.
உற்பத்தி இலக்கு முதலீட்டாளர்கள் அமையும் பட்சத்தில், ஆண்டுக்கு 15,000 ஸ்கூட்டர்கள் வரை உற்பத்தி செய்ய இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது. முதல்கட்டமாக, ஆண்டுக்கு 4,000 ஸ்கூட்டர்கள் என்ற இலக்குடன் உற்பத்தி துவங்கப்பட உள்ளது.
பார்க்கிங் பிரச்னை அலுவலகத்திலோ அல்லது வெளியிடங்களுக்கு செல்லும்போதோ நிறுத்துவதற்கான பார்க்கிங் பகுதியை தேட வேண்டிய அவசியமில்லையாம். கையிலேயே எடுத்துச் செல்லாம் என்று தெரிவிக்கின்றனர்.
விலை இந்த ஸ்கூட்டரை 3,100 டாலர் முதல் 4,600 டாலர் விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கின்றனர். மேலும், ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அன்ட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.