தீர்ப்புத்தகவல் அமைப்பு, (JUDIS) பல உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும் தன்னுள் அடக்கியுள்ளது. தீர்ப்புகளை (Judgment Information System (JUDIS)) ( http://judis.nic.in/supremecourt/chejudis.asp) என்ற இணையதள முகவரியில் காணலாம்.
• வாதி/பிரதிவாதி வாரியாக
• நீதிபதி பெயர் வாரியாக
• வழக்கு எண் வாரியாக
• தீர்ப்புத் தேதி வாரியாக.
• அரசியலமைப்புக் குழு வாரியாக
• அகரவரிசைப்படுத்தப்பட்ட வழக்குப்பட்டியல் வாரியாக
• தீர்ப்பு வாரியாக (Held wise)
• பொருள்/சொற்றொடர் வாரியாக (Text/phrase wise)
• சட்ட வாரியாக (Act wise) போன்றன.
மேற்குறிப்பிடப்பட்ட அனைத்துப்பட்டியலுகளும் இணையதளத்தின் இடது பக்கவாட்டில் இருக்கும். தேவைப்படும் தீர்ப்பினைக் குறித்து அறிய உரிய பட்டியலை கீழ்க்காணும் முறையில் கிளிக் செய்ய வேண்டும்.
வாதி/பிரதிவாதி வாரியாக (Petitioner/Respondent wise)
• வாதி/பிரதிவாதி பெயரைப்பதிவு செய்யவும்
• கீழிறங்குப் பெட்டி (drop drown box)யிலிருந்து ஏதேனும் ஒன்றைத்தெரிவு செய்யவும். அதாவது, தெரியாது அல்லது வாதி அல்லது பிரதிவாதி.
• கீழிறங்குப் பெட்டியிலிருந்து இரண்டு தேதிகளையும் (From – To) குறிக்கவும்.
• இறுதியாக அறிக்கையின் நிலையை அறிய Reportable status ஐ தேர்ந்தெடுக்கவும் அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்கவும்.
நீதிபதி வாரியாக (Judge name wise)
• நீதிபதி பெயரைப்பதிவு செய்யவும்
• கீழிறங்குப் பெட்டியிலிருந்து இரண்டு தேதிகளையும் (From – To) குறிக்கவும்.
• இறுதியாக அறிக்கையின் நிலையை அறிய status ஐ தேர்ந்தெடுக்கவும் அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்கவும்.
வழக்கு எண் வாரியாக (Case number wise)
• கீழிறங்குப்பெட்டி (drop drown box) யிலிருந்து வழக்கின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
• வழக்கின் எண்ணை பதிவு செய்யவும்.
• கீழிறங்குப்பெட்டியிலிருந்து வருடத்தைத் தெரிவு செய்யவும்.
• இறுதியாக, (drop drown box) ஐ தேர்ந்தெடுக்கவும் அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்கவும்.
தீர்ப்பு வழங்கிய நாள் வாரியாக (Date of judgment wise)
• கீழிறங்குப் பெட்டியிலிருந்து இரண்டு தேதிகளையும் (From – To) குறிக்கவும்.
• இறுதியாக அறிக்கையின் நிலையை அறிய Reportable status ஐ தேர்ந்தெடுக்கவும் அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்கவும்.
அரசியலமைப்புக் குழு வாரியாக (Constitutional bench wise)
• கீழிறங்குப்பெட்டியிலிருந்து (drop drown box) இரண்டு தேதிகளையும் From – To) தேர்ந்தெடுக்கவும்.
• இறுதியாக, Reportable status ஐ தேர்ந்தெடுக்கவும் அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்கவும்.
அகர வரிசைப்படுத்தப்பட்ட வழக்குப்பட்டியல் வாரியாக (Alphabetical case indexing wise)
• வாதி அல்லது பிரதி வாதியின் பெயரைப் பதிவு செய்யவும். உதாரணமாக (Amar)
• கீழிறங்குப் பெட்டியிலிருந்து (drop drown box) இரண்டு தேதிகளையும் தேர்வு செய்யவும்.
• இறுதியாக, Reportable status ஐ தேர்ந்தெடுக்கவும் அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்கவும்.
தீர்ப்பு வாரியாகவும். பொருள்/சொற்றொடர் வாரியாகவும் சட்டம் வாரியாகவும், தற்குறிப்பு வாரியாகவும் தீர்ப்புகளை இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.