கரிகாலன் கட்டிய கல்லணை
கி.பி. முதலாம் நூற்றாண்டைச்சேர்ந்த கரிகால் பெருவளத்தானின் மற்றொரு பெயர் திருமாவளவன். இவர் காவிரியில் தொடர்ந்து வெள்ளச்சேதம்ஏற்படுத்திய இடத்தில் ஒரு அணை கட்டினார். இயற்கையின் போக்கை உணர்ந்து கட்டப்பட்டது இந்த அணை. இந்த அணையின் தொழில்நுட்பத்தை வியந்துபோற்றுகிறார் வெளிநாட்டு பொறியாளரான சர். ஆர்தர் காட்டன்.
"ஓடும் நீரில் அணை கட்டும்தொழில் நுட்பத்தை எனக்கு எடுத்துக்காட்டி விளக்கியுள்ள, இந்த கல்லணையை கட்டியமுன்னோர்களை மனதார வணங்குகிறேன்" என்று கூறி தனது தொப்பியை கழற்றி வணங்கிநின்றாராம் ஆர்தர் காட்டன்.
ஓடும் நீரில் அணை கட்டுவதுமிகவும் கடினமான பணி. காரை மற்றும்சுண்ணாம்பு கரைந்து கொண்டே போய்விடும். நீரை வேறு பக்கம் திருப்பிவிட்டு, அதன்பின்பு அணையை கட்டியாக வேண்டும்,நீரை பாதை மாற்ற வேண்டும். ஆனால்காவிரியில் இது முடியாது.
வெள்ளம் ஏற்படும் காலங்களில்(தற்போது) நொடிக்கு 2 லட்சம் கன மீட்டர் நீர் பாய்கிறது. எனவே ஆற்றைத் திருப்புவது என்பது கடினம். அன்றைய காலகட்டத்தில் கர்நாடகத்தில் எந்தஅணையும் கட்டப்படவில்லை. அப்படி என்றால்அந்த காலத்தில் காவிரியில் எவ்வளவு தண்ணீர் வந்திருக்கும்? யோசித்துப் பார்க்க முடியவில்லை. இந்த அணை அருமையான தொழில்நுட்பத்தின் மூலம்கட்டி சாதித்துக்காட்டி உள்ளனர்.
ஆற்றங்கரையிலோ, கடற்கரையிலோநாம் நிற்கையில் காலில் நீர் வந்து பாயும்போது, நமது கால்கள் மண்ணில் மெல்ல மெல்லபதிவதைக் காணலாம். அப்போது நீரோட்டம் மணலைஅரிக்துக்கொண்டு போக கனமான நம் கால்கள் மண்ணில் பதியும், இந்த நுட்பத்தைத்தான் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஓடும் நீரோட்டத்தின்மீது பெரியபாறைகளை வைத்துள்ளனர். அது மெல்ல மெல்லமணலுக்குள் பதிந்து அடியில் பாறைப்பகுதியை அடையும். அதன்பின் அதே இடத்தில் மற்றொரு பாறைவைக்கப்படும். இவ்வாறு வைக்கும்போதுஇரண்டு பாறைகளுக்கு இடையில் ஒரு வகையான கரையாத தன்மை கொண்ட களிமண்ணைப் பயன்படுத்திஉள்ளனர்.
தஞ்சைப் பகுதியில்பெரும்பாறைகள் கிடைப்பது அரிதான விஷயம். அதனால் புதுக்கோட்டை அல்லது திருச்சி பகுதிகளில் இருந்து கற்களைக் கொண்டுவந்திருக்கவேண்டும். இப்படி பலஇடையூறுகளைக் கடந்து கல்லணை கட்டப்பட்டதை நினைத்தால் வியப்பும் பெருமையும்பொங்குகிறது. போர்டு ஸ்மித் என்பவர் இதுஒரு மிகச்சிறந்த சாதனை என்கிறார்.
ஏனென்றால் ஆற்றுப்படுகையில்அணைகட்டும் தொழில்நுட்பம் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான்கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குப்பல நூறுஆண்டுகளுக்கு முன்பே இந்த அணை கட்டப்பட்டதால் இதற்கு "கிராண்ட் அணைக்கட்" என்றுபெயர் வைத்தார். இந்தப் பெயரில்தான் இந்தஅணை உலகம் முழுவதும் அழைக்கப்படுகிறது.
கோவில்களை மட்டுமே பிரமாண்டமாககட்டிக்கொண்டிருந்து அன்றைய தமிழ் மன்னர்கள் வழியில் விவசாயத்திற்காக அணையை கட்டியகரிகாலன் உண்மையிலேயே தமிழர்களைப் பெருமைப்படுத்திய சாதனை மன்னர்தான்!
நன்றி : தினத்தந்திதமிழ் நாளேடு