01 நெனப்பு பொழப்ப கெ(ா)டுக்கும்!!!!!!
நம்ம ஊர்ல ஒரு பழமொழி இருக்கு நெனப்பு பொழப்ப கெடுக்கும். அது எப்படி நெனப்பு பொழப்ப கெடுக்கும்? பாக்கலாமா?
உங்களுக்கு ரோல்மாடல் யாரு? அல்லது நீங்க யார மாதிரி வரணும் யோசிச்சி பதில் சொல்லுங்க. அதிகம் பேரோட பதில் என்னவா இருக்கும் நான் சச்சின் மாதிரி வரணும் விராட் கோலி மாதிரி வரணும் தல அஜித் மாதிரி வரணும் கல்பனா சாவ்லா மாதிரி வரணும் பி.வி.சிந்து மாதிரி வரணும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மாதிரி வரணும் அப்துல்கலாம் ஐயா மாதிரி வரணும் இப்படி லிஸ்ட் நீண்டுகிட்டே போகும். என்ன சரிதானே?
நூத்துக்கு தொன்னூறு பேருக்கு வேற யோரோ மாதிரி வரணும்னுதான் தோனும் என்ன நான் சொல்லுறது சரிதானே? கொஞ்சம் பேரோட பதில் மட்டும்தான் நான் எனக்கு புடிச்ச மாதிரி வரணும்னு சொல்லுவீங்க கரட்டு தானே?
வாழ்கையில பெருசா சாதிச்சவங்க எல்லாம் அவங்கள நேசிச்சவங்க. மத்தவங்க எல்லாம் சாதனையாளர்கள நேசிச்சவங்க. விவேகானந்தர் என்ன சொல்லுரார் நீ எதை சிந்திக்கிறாயோ அதுவாகவே மாறிவிடுகிறாய். இங்க நாம கவனிக்கனும் நாம நமுக்கு புடிச்ச ஹீரோவ சிந்திக்கிறோம். நீங்க சுந்தர் பிச்சை மாதிரி வரணும்னு சிந்திக்கும் போது அங்க உங்களுக்குள்ள இருக்கிறது சுந்தர் பிச்சைதான் நீங்க இல்லை. படைப்பின் இரகசியம் என்னவென்றால் ஒவ்வொருவரும் தனித்தனி திறமையுடன் படைக்கப்பட்டிருக்கிறார்கள். நீங்க எப்படி சுந்தர் பிசையாக முடியும். நீங்கள் நீங்களாக இருந்தால்தானே உயர முடியும். சுந்தர் பிச்சை அவரை நேசித்தவர் அவருக்கு ரோல் மாடல் அவர்மட்டுமே உங்களுக்கு?
ஒரு சின்ன எடுத்துக்காட்டு இனிப்பை எடுத்துக்கொள்வோம். ஜாங்கிரி, பாதுஷா, பால்கோவா, லட்டு, மைசூர்பாக்கு…….. இது மாதிரி இருக்கு அனைத்துக்கும் பொதுவான பெயர்? இனிப்பு. ஆனா எல்லாருக்கும் எல்லா ஸ்வீட்டும் புடிக்காது. சச்சின் விராட்கோலியா ஆக முடியாது. பில்கேட்ஸ் சுந்தர்பிச்சையா ஆக முடியாது. மா மரத்தில் தேங்காய் காய்காது. அப்படி மாமரம் தேங்காய் காய்க்க முயற்சித்தால் என்னவாகும் மாமரம் மிகுந்த துயரத்தில் மாங்காயைத்தான் காய்க்கும். நீங்க மத்தவங்க மாதிரி ஆக முடியாது. இங்கு ஒவ்வொருவரின் திறமை தனி ஒரே துறையில் வேலை செய்பவர்களும் பணி செய்யும் விதம் மாறுபடும். அவர் அவர்களுக்கு ஒரு ஸ்டைல் இருக்கும் இதை எவராலும் மாற்ற முடியாது.
நான் மத்தவங்கள மாதிரி வர நெனச்சா நீங்க உங்க சொந்தகாலில் நிற்க்கவில்லை எனவே நெனப்பு பொழப்ப கெடுக்கும். நான் என்கிட்ட இருக்கிற திறமைய தேட ஆரம்பிச்சா மொத்தத்துல நான் நானா இருந்தா என் சொந்த காலில் நின்றால் நெனப்ப பொழப்ப கொடுக்கும் என்ன நான் சொல்லுறது சரிதானே?
நெனப்ப எப்படி சரி பண்ணுறது எப்படி என் திறமைய கண்டுபிடிக்கிறது அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.
நன்றி வாழ்க வளமுடம்.
ஆக்கம்
கல்விகுரு குழு
8608205243
மாலை 5:00 மணிக்கு மேல் அழைக்கவும்