02 ஏன் என்னோட நெனப்பு மாறுது?
இந்த உலகத்திலே மிகவும் மகிழ்ச்சியானவர்கள் குழந்தைகள் மட்டுமே. குழந்தைகள் மட்டுமே தேவையில்லாதவற்றை சுமப்பதில்லை. எடுத்துக்காட்டு காலையில் ஒரு குழந்தையை அடித்துவிட்டோம் என வைத்துக்கொள்வோம். அந்த நேரத்திற்கு அக்குழந்தை அழும். பின்னர் சிறிது நேரம் கழித்து அனைத்தையும் மறந்துவிட்டு இயல்பான மகிழ்ச்சிக்கு திரும்பிவிடும். ஆனால் அந்த குழந்தை வளர வளர அனைத்தையும் ஞாபகம் வைத்து கொண்டு அதையே சிந்தித்து சிந்தித்து துயரத்தில் ஆழ்ந்துவிடும்.
முதலில் நமக்கு தேவையான சிந்தனை எது தேவையற்ற சிந்தனை எது என்பதை பிரிக்கவேண்டும். மாற்றவே முடியாதவற்றை சிந்திப்பதில் என்ன பயன்? இறந்த காலத்தை மாற்றவே முடியாது, நம் மனம் அதிகம் சிந்திப்பது இறந்தகாலப்பதிவுகளை சிந்திப்பது நிச்சயமாக கடவுளால் கூட இறந்தகாலத்தை மாற்ற முடியாது. நாம் இறந்த காலத்தை சிந்திப்பதால் என்ன பலன்? இங்கு கவனிக்கவேண்டிய ஒன்று கடந்து போன நொடியை கூட மாற்ற முடியாது. எடுத்துக்காட்டு கை தவறி ஏதோ ஒரு பொருள் உடைந்துவிட்டது, உடைந்தது கடந்து போன நொடி அதை நிச்சயமாக மாற்ற முடியாது, ஆனால் அதை மாற்ற நினைத்து துயரத்தில் ஆழ்வோம் என்ன நான் சொல்லுறது சரிதானே?
ஒரு பழமொழி இருக்கிறது கடந்தகாலம் என்பது உடைந்த பானை, எதிர்காலம் என்பது மதில்மேல் பூனை, நிகழ்காலம் என்பது கையில் கிடைத்த வீனை. எதிர்காலம் என்பது எப்படி இருக்கும் என்பது தெரியாது. நாம் எதிர்காலத்தை நினைத்து நினைத்து பயந்து கொண்டிருப்போம். எதிர்காலத்தை நம் மனம் சிந்தித்து பயம்கொள்ளக்காரணம் கடந்தகாலப்பதிவுகளை நாம் அதிகமாக சிந்திப்பது மாற்ற முடியாத ஒரு விஷயத்தை சிந்திப்பதால் என்ன பலன்?
சாதனையாளர்கள், குழந்தைகள் நிகழ் கணத்தில் வாழ்கிறார்கள் நாமோ கடந்தகாலத்தை நினைத்து துயரத்திலோ அல்லது எதிர்காலத்தை நினைத்து பயத்திலோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நிகழ்கணத்தில் வாழும்போது எதிர்காலம் சிறப்பாக செதுக்கப்படுகிறது. நாம் எந்த செயல் செய்கிறோமோ அதில் மனம் ஒன்றி(நிகழ்கணகத்தில்) செயல்பட்டால் அந்த செயல் முழுமை பெறுகிறது. முழுமையாக செயல்படுபவன் முழுமையாக வாழ்ந்து வெற்றியாளன் ஆகிறான்.
சாதாரணமாக வாழ்பவர்கள் செயல்களின் மனம் ஒன்றி (நிகழ்கணத்தில்) செய்வதில்லை அவர்கள் செயலும் முழுமை அடைவது இல்லை. இவர்கள் வெற்றியாளர்களைப் பார்த்து ஒப்பிட்டுக்கொண்டு வருந்துகிறார்கள். நிகழ்கணத்தில் வாழும்போது ஒப்பிடும் தன்மை வராது. அனைத்து சாதனையாளர்களும் நிகழ்கணத்தில் வாழ்பவர்களே. நிகழ்கணத்தில் வாழ்பவர்களுக்கு துன்பமோ துயரமோ இல்லை. அவர்கள் கல்வி கற்பதிலும் மிகவும் சிறந்து விளங்குகிறார்கள்.
எப்படி நிகழ்கணத்தில் வாழ்வது அடுத்த பதிவில் பார்ப்போம். வாழ்க வளமுடன்
ஆக்கம்
கல்விகுரு குழு
8608205243
குறிப்பு மாலை 5:00 மணிக்கு மேல் அழைக்கவும்