கல்வி குரு        

News

விரைவில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சில ஆலோசனைகள்!

JAN 04, 2019 No Comments

img

கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் சூத்திரங்கள், வாய்ப்பாடுகள், கணிதம் மற்றும் அறிவியல் சமன்பாடுகள் இருக்கும். இவற்றை மனதில் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பெரியதாக இருக்கும் சமன்பாடுகள், சூத்திரங்களை சிறிய சிறிய பகுதிகளாக பிரித்து நன்றாக படித்து மனதில் பதிவு செய்துகொள்ளவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எவ்வளவு பெரிய சூத்திரத்தையும் எளிதில் படித்து மனதில் பதிவு செய்துகொள்ளமுடியும்.

தினமும் இரவு உறங்கச்செல்லும் முன்பு ஒரு மணி நேரத்தை படித்ததை நினைவுபடுத்திப் பார்க்க பழகுங்கங்கள். நீங்கள் படித்த முக்கியமான சூத்திரங்கள், அல்லது நீங்கள் கடினம் என்று கருதும் பாடங்களை நினைவுபடுத்திப் பாருங்கள். சந்தேகம் ஏற்பட்டால் உடனே புத்தகத்தை எடுத்து மீண்டும் படியுங்கள். பின்னர் உறங்கச்செல்லுங்கள். பின்னர் காலையில் எழுந்ததும் இரவில் படித்ததை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்திப்பாருங்கள்.

எந்த ஒரு பாடத்தையும் படித்து முடித்த பின்னர் ஒரு மணி நேரம் கழித்து புத்தகத்தை பார்க்காமலேயே அந்த பாடங்களை எழுதிப்பாருங்கள். இதன் மூலம் படித்த பாடங்களை மறக்காமல் நினைவில் வைத்திருக்க முடியும்.

பழைய கேள்வித்தாள்களை சேகரித்து, அவற்றை வைத்து தேர்வு எழுதிப்பழகுங்கள். ஒவ்வொரு வாரமும் நீங்களாகவே பழைய கேள்வித்தாள்கள் அல்லது நீங்களாகவே தேர்வு செய்த கேள்வித்தாள்கள் மூலம் தேர்வு எழுதிப்பழகுங்கள். இதன் மூலம் தேர்வு குறித்த பயம் விலகும். மேலும் மாதிரித்தேர்வுகள் எழுதிப்பார்க்கும் போது எந்த இடத்தில் எந்தப்பகுதி மறந்து போகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு அதிக மதிப்பெண் பெற இயலும்.

தேர்வு எழுதச்செல்லும் முன்பு சிலர் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக படிப்பதை தவிருங்கள். தேர்வு எழுதச் செல்லும் முன்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு எதையும் படிக்காமல் அமைதியாக இருக்க வேண்டும். மனதை ஒரு நிலைப்படுத்தி இயல்பு நிலையை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக படித்ததை நினைவு படுத்தி பார்க்கிறேன் என்று படித்த பாடங்களை மனதுக்குள் சொல்லிப் பார்ப்பது கூடாது. ஏன் என்றால் எதாவது ஒரு பகுதி மறந்து விட்டால் உங்களை அறியாமல் பதட்டம் ஏற்படும். இதனால் படித்த அனைத்து பாடங்களும் மறந்து விடும் ஆபத்து உண்டு. எனவே தேர்வுக்கூடம் செல்லும் முன்பு அமைதியான மனநிலையில் சென்று தேர்வை எதிர்கொள்ளுங்கள்.

தேர்விற்கு முற்தைய நாள் இரவில் நீண்ட நேரம் கண் விழித்து படிப்பது கூடாது. தேர்வினை சிறந்த முறையில் எதிர்கொள்ள சரியான அளவு தூக்கமும் அவசியமாகும்.தேர்வு நாளன்று காலை மிதமான உணவு அவசியம் உட்கொள்ளவும். பெரும்பாலும் இட்லி போன்ற ஆவியில் வேக வைத்த உணவு சிறந்தது. எண்ணெயில் பொறிக்கப்பட்ட அல்லது எளிதில் ஜீரணமாகாத உணவு வகைகளைத் தவிர்க்கவும். தேர்வினை தைரியமாகவும் நேர்மையாகவும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளுங்கள். 

தேர்வில் அனைவரும் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற கல்விகுரு குழு உங்களை வாழ்த்துகிறது. உளவியல் சம்பந்தமான ஆலோசனைகளுக்கு திரு. ஆ. சின்னதுரை (8608205243) அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்

Important Websites

TN GOVT   |   

TN GOVT EXAMS   |   

DA TABLE   |   

மருந்தில்லா மருத்துவம்   |   

காமராசரின் அரிய புகைப்படங்கள்   |   

TEACHERS RECRUITMENT BOARD   |   

TNPSC   |   

EMPLOYMENT EXCHANGE   |   

NHIS2016 ID Card Web Site   |   

CPS WEBSITE   |   

ePay Roll Online Entry   |   

Treasury ECS Salary Settlement Date   |   

Personnel Information System   |   

CPS Account Slip   |   

EMIS Online Entry   |   

GPF Account Slip Website   |   

TNDSE LOGIN   |   

to check Aadhar linking status   |   

Three Types of Certificates   |   

Laptop Online Entry   |   

Digital locker   |   

BANK IFSC & MICR CODE   |   

Matrimonial   |   

PAY EB BILL ONLINE   |   

POWER FINANCE ONLINE ENTRY   |   

SCHOLARSHIP   |   

SC/ST Scholarship   |   

Central Education Loan Site   |   

சுழன்றும் ஏர் பின்னது உலகம்   |   

OnLine APPLY NEW RATION CARD   |   

Free Cycles Online Entry 2018-19   |   

DATA CENTRE   |   

DDO Template   |   

PG TRB Online Apply   |   

INCOMETAX e-FILING   |   

Online Complined to Police Station   |   

DGE Site   |   

BIN VIEW   |   

NEW TEXT BOOK   |   

TNSCHOOLS   |   

TNSCERT   |   

CEOTVM   |   

E-sr digitization   |   

NEET 2019 APPLY   |   

AEBAS BIO-METRIC ATTENDANCE   |   

Copyright © 2015. All rights reserved by kalviguru.com. Designed By Tycoon Pacific.

Connect With Us: