கல்வி குரு        

News

பிளஸ் 1 தேர்வு மே 30ல், ரிசல்ட்

MAR 07, 2018 No Comments

பிளஸ் 1 தேர்வு முடிவுகள், மே, 30ல் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பாடத்திட்டத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், ஒவ்வொரு பாடத்துக்கும், 100 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வு மற்றும் அகமதிப்பீட்டு விதிகளும் மாற்றப்பட்டுள்ளன.புதிய விதிகளின்படி, தமிழகம், புதுச்சேரியில், பிளஸ் 1 பொது தேர்வு, இன்று துவங்குகிறது. இதில், 8.61 லட்சம் மாணவர்களும், 1,753 தனித்தேர்வர்களும் பங்கேற்கின்றனர். இதற்காக, தமிழகம், புதுச்சேரியில், 2,795 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்வு முடிவுகள், மே, 30ல் வெளியாகும் என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்

Copyright © 2015. All rights reserved by kalviguru.com. Designed By Tycoon Pacific.

Connect With Us: