கல்வி குரு        

Student Zone

இந்த 9 விதிகள் உங்கள் வாழ்க்கை தரத்தை நிச்சயம் உயர்த்தும்!

வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்றுதான். ஆனால் நாம் வாழும் முறையில்தான் நமது வாழ்க்கையின் அர்த்தம் அடங்கியிருக்கிறது. வாழ்க்கையை ரசனையாக வாழவும், நினைத்த செயல்களை செய்து முடிக்கவும் வெற்றியாளர்கள் சொல்லும் 9 எளிய விதிகள் என இவற்றைப் பட்டியலிடுகிறார்கள். அது இங்கே அப்படியே...!

1.இலக்கை தீர்மானியுங்கள் !

தோட்டா எவ்வளவு வேகமாக இருந்தாலும், அதனை சரியாக செலுத்த துப்பாக்கி அவசியம். அந்த துப்பாக்கிதான் இலக்கு. குறைந்த காலத்திட்டங்கள் மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் என இரண்டு விதமாக உங்கள் இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். குறைந்தகால இலக்காக, பணி உயர்வு பெறுவது, நீண்டநாள் கனவுகளை நிறைவேற்றுவது என சின்னச்சின்ன விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நீண்டகால இலக்காக, உங்களின் லட்சியங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். குறைந்தகாலத் திட்டங்களை அதற்குரிய கால இடைவெளிகள் செய்து முடித்து விட்டோமோ? என சுயபரிசோதனை செய்து கொண்டால், அடுத்தமுறை அதற்கேற்றபடி திட்டமிடலாம். நீண்டநாள் லட்சியங்களை வருடத்திற்கு ஒருமுறை எந்தளவு நீங்கள் அதனை நெருங்க முடிந்தது எனப்பார்த்து அடுத்த ஆண்டு, அதற்கேற்ப திட்டமிடுங்கள். நாம் இன்று விதைப்பதைதான் நாளை அறுவடை செய்ய முடியும் !

2.ககபோ !
.
காதலோ, கஷ்டமோ எதுவும் கடந்து போகும். எனவே கடந்த காலத்தில் உங்கள் வாழ்க்கையில் நடந்த, மோசமான விஷயங்களை நினைத்து வருந்துவதை விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சந்தோஷமாக இருங்கள். நாம் என்ன செய்தாலும், கடந்த காலத்தை மாற்ற முடியாதே? பின்னர் ஏன் அதை நினைத்து வருந்த வேண்டும்? இன்றைக்கு நீங்கள் செய்யும் விஷயங்கள்தான் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும். அவற்றில் மட்டும் கவனம் இருக்கட்டும். கடந்த கால அனுபவங்கள் தந்த பாடங்கள் மட்டும் போதும் நமக்கு!

3. கை கொடுக்கும் நம்பிக்கை !

நம்பிக்கையின் வெற்றியே முழுவதுமாக நம்புவதில்தான் இருக்கிறது. உங்களால் எதுவும் முடியும் என்கிற கர்வமில்லாத, முழு நம்பிக்கை மிக அவசியம். அனுபவமும், திறமையும்தான் இந்த துணிச்சலைத் தரும். அதனை அதிகமாக்குங்கள். “சிறகிருந்தால் போதும், சிறியதுதான் வானம்” என்பது கவிஞர் வைரமுத்துவின் வரி. அந்த சிறகு உங்கள் நம்பிக்கைதான்.

4.அடக்கம் அவசியம் !

வெற்றிகளும், பொறுப்புகளும் வர வர அடக்கமும் வரவேண்டும். பணிவுதான் தலைமைப்பண்புக்கு முதல் தகுதி. அந்தப்பணிவை தலைவன் ஆனாலும் விட்டுவிடாதீர்கள். தற்புகழ்ச்சி, சுயவிளம்பரம் இதெல்லாம் நீங்கள் நிச்சயம் வெறுக்க வேண்டியவை. எத்தனை பேரும், புகழும் வந்தாலும், அத்தனையும் “எல்லாபுகழும் இறைவனுக்கே” என சொல்லும் பண்பு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மட்டுமல்ல.. உங்களுக்கும் அவசியம்.

5. மாத்தியோசி
.
“மரம் வெட்டுவதற்கு எனக்கு 9 மணிநேரம் கொடுத்தால், 6 மணிநேரம் நான் எனது கோடரியை கூர் செய்வேன்”- இதைச்சொன்னது ஆபிரகாம் லிங்கன். ஸ்மார்ட்வொர்க் (smartwork) என்பதற்கு இது ஒரு சரியான உதாரணம். திட்டமிடப்படாத கடின உழைப்பு முனைமழுங்கிய கோடரியை வைத்து 9 மணி நேரம் மரம் வெட்டுவது போலத்தான். எனவே நீங்கள் செய்யும் பணிகளில் இந்தப்பார்வை மிகவும் முக்கியம். இப்படி கிரியேட்டிவாக பணிசெய்தால், அலுவலகம் எப்படிப்பிடிக்காமல் போகும்?

6.சேமிப்பு !

“உங்களுக்குத் தேவையற்ற பொருட்களை எல்லாம் வாங்கிக் குவித்தால், உங்களுக்கு தேவையானதை எல்லாம் ஒருநாள் விற்க நேரிடும்”- இப்படி மிரட்டுவது பொருளாதார நிபுணரும், சிறந்த தொழிலதிபருமான வாரன் பஃபெட். சேமிப்பும், ஒருவகையில் உங்களின் லாபம்தான். சேமிப்பும் ஒரு வருமானம்தான். எனவே சரியான திட்டமிடலுடன் சேமிப்பு ரொம்ப முக்கியம்.

7. நேர மேலாண்மை !

நீங்கள் எவ்வளவு செலவு செய்தாலும், உங்களின் கடந்த ஒரு நொடியை கூட உங்களால் திரும்பப்பெற முடியாது. அப்படியெனில் அதன் மதிப்பு எவ்வளவு என யோசித்துப் பாருங்கள். எந்த விஷயத்தையும் நாளை என தள்ளிப்போடாமல், “தள்ளிப்போடாதே..” என இன்றே முடித்து விடுங்கள். ஒரு நொடியில் நீங்கள் எடுக்கும் முடிவு கூட, மிகப்பெரிய வெற்றிகளை உங்களுக்காக வைத்துக்கொண்டு காத்திருக்கலாம்.

8.குழுவாகச் செயல்படுங்கள் 
.
இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன் ஆன, சச்சின் இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் அல்ல. ஆனால் தோனி ? சொல்லவே வேண்டாம். உங்களது திறமை என்பது வேறு. குழுவாக இணைந்து பணியாற்றுவது என்பது வேறு. இந்த திறமையால்தான் சிறந்த கேப்டன் எனக்கொண்டாடப்படுகிறார் தோனி. அடுத்தவர் கருத்துக்கு மதிப்பளியுங்கள். அடுத்தவர் கருத்துக்கு காதுகொடுங்கள். அவர்களின் சிரமங்களுக்கு கைகொடுங்கள். பிறகு உங்களை விட சிறந்த டீம் லீடர் யாரும் இருக்க முடியாது.

9. கற்றுக்கொள்ளுங்கள்.. கற்றுக்கொண்டே இருங்கள்.

 

 

நன்றி  திரு. வி. மோகன்தாஸ்

99947 74787

WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்

Copyright © 2015. All rights reserved by kalviguru.com. Designed By Tycoon Pacific.

Connect With Us: