கல்வி குரு        

Employment

பெரம்பலூரில் பிப். 24- இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

FEB 22, 2018 No Comments

img

 

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப். 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. 
பெரம்பலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கோடு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இம்முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திருச்சி, சென்னை, கோவை, கரூர், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனத்துக்குத் தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

 18 வயது முதல் 35 வயது வரையுள்ள 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐ.டி.ஐ, டிப்ளமோ, தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். 

மேலும்,  வேலைவாய்ப்பு பெறுவதற்குத் தேவையான திறன் பயிற்சி பெறுவது தொடர்பாக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஆலோசனைகள் வழங்குவதற்கும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெறுவது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலவாய்ப்பு நிறுவனம் மூலம் ஆலோசனைகள் வழங்குவதற்கும், வேலைவாய்ப்பு தொடர்பான உதவிகள் பெறுவதற்காக மாதிரி வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.  
இந்த வேலைவாய்ப்பு முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிகளையுடையோர் பங்கேற்று பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்

Copyright © 2015. All rights reserved by kalviguru.com. Designed By Tycoon Pacific.

Connect With Us: