கல்வி குரு        

Employment

இந்திய ரயில்வேயில் 62,907 குரூப் டி வேலை: RRB அறிவிப்பு

FEB 10, 2018 No Comments

img

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய ரயில்வே துறை. நாடு முழுவதும் சிறந்த சேவையாற்றும் இந்த நிறுவனத்தில், வேலைவாய்ப்பை பெறுவது இளைஞர்களின் விருப்பங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் பல ஆயிரம் கணக்கான பணியிடங்களுக்கு அறிவிப்பை ரயில்வே தேர்வுவாரியம் வெளியிட்டு வருகிறது. தற்போது 65,907 குரூப் "டி" பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து மார்ச் 12க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிக்கப்பட்டுள்ள 62 ஆயிரத்து 907 பணியிடங்களும் போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த வாய்ப்பினை இளைஞர்கள் பயன்படுத்தி பயன்பெறவும். 

மாநில அரசில் வெளியிடும் குறைந்த பணியிடங்களுக்கான அறிவிப்புக்காக இளைஞர்கள் காத்திருக்காமல், தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வரும் மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பித்து முழுமையான ஈடுபாடுகளுடன் முயற்சி செய்யுங்கள்.

உங்கள் கையில் இருக்கும் வாய்ப்பை கைநழுவ விடாதீர்கள்...! முயற்சிப்போம்... வெற்றிபெறுவோம்...!!

CENTRALISED EMPLOYMENT NOTICE(CEN) NO.02/2018

மொத்த காலியிடங்கள்: 62,907

பணி: Trackman
பணி: Gateman
பணி: Pointsman
பணி: Helpers in Electrical Engineering
பணி: Mechanical Engineering
பணி: Signal & Telecommunication Engineering

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 31க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின் சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.18,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினருக்கு ரூ.250.

விண்ணப்பிக்கும் முறை: www.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.03.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rrbchennai.gov.in/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்

Copyright © 2015. All rights reserved by kalviguru.com. Designed By Tycoon Pacific.

Connect With Us: