கல்வி குரு        

Employment

ஆய்வக உதவியாளர் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

JAN 27, 2018 No Comments

img

தமிழ்நாடு தடவியல் அறிவியல் துறையில் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ள 56 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து பிப்ரவரி 21க்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Laboratory Assistant 

காலியிடங்கள்: 56

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவவியல், விலங்கியல் பாடங்கள் கொண்ட பிரிவில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 

தேர்வு கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் வங்கி அட்டைகள் பயன்படுத்தி செலுத்தலாம்.

ஒரு முறை பதிவுக் கட்டணம்: ரூ.150. (பதிவு செய்யாதவர்கள் மட்டும்)

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in / www.tnpscexams.net / www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், சிதம்பரம்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.02.2018

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 23.02.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 06.05.2018 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_02_new_laboratory_assistant.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்

Copyright © 2015. All rights reserved by kalviguru.com. Designed By Tycoon Pacific.

Connect With Us: